Thursday, 13 June 2019

Kathiravan Thontrum கதிரவன் தோன்றும்



Kathiravan Thontrum

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன்

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன்

3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் – கதிரவன்

4. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே – கதிரவன்

5. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் – கதிரவன்

6. வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் – கதிரவன்

Ullam Anantha Geethathile உள்ளம் ஆனந்த கீதத்திலே



Ullam Anantha Geethathile

உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்

3. உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே

Kaalaiyum Maalaiyum காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum
காலையும் மாலையும் வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்

6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும்

7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்

Wednesday, 12 June 2019

Nantri Entru Sollugirom Natha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா


Nantri Entru  Sollugirom Natha

நன்றி  என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

Jothi Thontrum Oor Desamundu ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

Jothi Thontrum Oor Desamundu


1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் – இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்

6. அங்கே நம் ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் – இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்

Monday, 10 June 2019

Nantriyaal Thuthi Paadu நன்றியால் துதிபாடு

Nantriyaal Thuthi Paadu

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
உள்ளதால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் – 2 – (நன்றியால் துதிபாடு)

2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே – 2
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு – 2 – (நன்றியால் துதிபாடு)

3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் – 2
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் – 2 – (நன்றியால் துதிபாடு)

4. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் – 2 – (நன்றியால் துதிபாடு)

5. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் – 2
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் – 2 – (நன்றியால் துதிபாடு)

Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்

Paava Naasar Patta Kaayam

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.