Sunday, 17 April 2022

Varum Varum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே


 


வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமேவாரும்

2. தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையேவாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமேவாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமேவாரும்

5. காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்வாரும்

6. மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனேவாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமேவாரும்

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்வாரும்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.