எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே
2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
4. திறந்த வாசல் முன்னே
தீவிரம் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார்
5. மனிதரை ஜனங்களை
மன்னவர் தருவாரே
நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்
ஜீவன் தந்தவர் கேட்கிறாரே
6. ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே
7. சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.