Sunday, 30 January 2022

Deva Ennai Aaseervathiyum தேவா என்னை ஆசீர்வதியும்


 

தேவா என்னை ஆசீர்வதியும்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா

1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

 தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

2. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்

3. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

4. தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்

Saturday, 29 January 2022

Thuthiungal Thevanai துதியுங்கள் தேவனை


 

துதியுங்கள் தேவனை 

துதியுங்கள் தூயோனை 


1. அவரது அதிசயங்களை பாடி 

அவரது நாமத்தை பாராட்டி 

அவரை ஆண்டவர் என்றறிந்து 

அவரை போற்றுங்கள் 

ஆப்ரகாமின் தேவனை 

ஈசாக்கின் தேவனை 

ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள் 


2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை 

இடையூற்றினை போக்கினோனே 

கானானின் தேசத்தை காட்டினோனே 

கர்த்தரை போற்றுங்கள் 

ராஜாதி ராஜனை 

கர்த்தாதி கரத்தனை 

ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்


Tuesday, 25 January 2022

Kirubai Purinthenai Aal கிருபை புரிந்தெனை ஆள்


 

கிருபை புரிந்தெனை ஆள்நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள்நிதம்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில் நரனாகிய மாதுவின் வித்துகிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவும் தயை வைத்துகிருபை

3. தந்திரவான் கடியின் சிறை மீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்பு பாராட்டுகிருபை

4.  தீமை உறும் பல  ஆசையை நீக்கி
ஸ்வாமி என்னை உமக்காலயம்  ஆக்கிகிருபை

5. தொல் வினையால் வரு சாபம் ஒழித்து
நல் வினையே செய் திராணி அளித்துகிருபை

6. அம்பர மீதுறை வானவர் போற்றக்
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்தகிருபை


Sunday, 23 January 2022


 

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

1. கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

2. அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை
இதயம் சுமையில்லை


Saturday, 22 January 2022

Kalangaathey Maname கலங்காதே மனமே


 

கலங்காதே மனமே  திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே

1.கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்

2.அநாதி தேவனே உனது அடைக்கலம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்

3.அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதி கொள் மனமே.


Ummai Noki Parkintren உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்


 


உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் நான்
என்னை மறக்கின்றேன்

4. வாழ்வின் பாதையை
எனக்குக்  காட்டுவீர்
உமது சமூகமே தினம்
எனக்குத் தீபமே


Friday, 21 January 2022

Kuyavane Kuyavane குயவனே குயவனே


 


குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமேகுயவனே

2. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமேகுயவனே

3. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமேகுயவனே