Tuesday, 14 September 2021

Megameethinil Vegamudan மேக மீதினில் வேகமுடன்


 

மேக மீதினில் வேகமுடன்
மேசியா ஏசுவே வந்திடுவார்

1. மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூதசேனை சூழ்ந்திடவே

2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறை வேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே

3. தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
கானக சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா

4. காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலே
நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்

5. இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்

6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காகக் காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

Monday, 13 September 2021

Viduthalai Viduthalai விடுதலை விடுதலை


 

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே

இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்

தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

 

1. தடுக்கும் பாவ தளைகளில் விடுதலை

கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை

என்ன சந்தோஷம் இந்த விடுதலை

எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்  - விடுதலை

 

2. எரிக்கும் கோபப் பிடியினில்  விடுதலை

விதைக்கும் தீய பொறாமையில்  விடுதலை

அன்பர் இயேசுவே தந்த  விடுதலை

இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே - விடுதலை

 

3. அடுக்காய் பேசும் பொய்யினில்  விடுதலை

மிடுக்காய் வீசும் பெருமையில்  விடுதலை

ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே

தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே - விடுதலை

 

4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை

மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே

என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு

மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையோ - விடுதலை

Alleluah Thuthi magimai அல்லேலூயா துதி மகிமை


 

அல்லேலூயா துதி மகிமைஎன்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடி வருவாயா

2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்க வேண்டும்

3. ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

5. கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்

Sunday, 12 September 2021

Seeyon Thesamathil சீயோன் தேசமதில்


 

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

அன்பருடன் வாழ்வேன்

ஜெயகீதம் பேரின்பம்

துதி பாடி மகிழுவேன்

 

1. நகரத்தின் வீதிகள்

பொன்னாக மின்னுதே

இராப் பகல் இல்லையே - என்

இரட்சகர் வெளிச்சமே

 

2. என் கண்ணீர் யாவையும்

கரத்தால் துடைப்பாரே

சஞ்சலமில்லையே - என்

நேசர் மகிழ்ச்சியே

 

3. மண் சாயல் மாறியே

விண் சாயல் அணிந்துமே

மறுரூபம் அடைவேனே - என்

இயேசுபோல் மாறுவேன்

 

4. நிதமும் என் நேசரை

துதிபாடி போற்றுவேன்

மகிபனின் தேசத்தில் - நான்

மகிமையாய் வாழுவேன்

Thursday, 9 September 2021

Naanum En Veetaarumovendral நானும் என் வீட்டாருமோவென்றால்


 

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா  நீயும் சேவிப்பாயா

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பா யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா

Tuesday, 7 September 2021

Bayapadathae Siru Manthaiyae பயப்படாதே சிறுமந்தையே


 

பயப்படாதே சிறுமந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே

1.புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின்  இராஜ்ஜியமே
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர்மலன் ஆவியாலே

2.ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவார் இயேசுவோடு

3.கர்த்தாவே என்றும் கனியற்ற  மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில்

4. பலவந்தம் செய்வோர் பெற்றிடும் இராஜ்ஜியம்
சமீபமாய் இருக்கின்றதே
இரத்தம் சிந்திப் பாவத்தை எதிர்த்து
பெறுவோம் இராஜ்ஜியத்தை

Monday, 6 September 2021

Senaiyin Kartha சேனையின் கர்த்தா


 

1. சேனையின் கர்த்தா
சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்

2. ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே

3. சேனையின் கர்த்தா
சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை

4. மன்னா நீர் சூரியன்
என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்

5. திரியேக தேவே
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.