Monday, 4 July 2022

Avar Arputhamaanavare அவர் அற்புதமானவரே


 


1. அவர் அற்புதமானவரே – 2
எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரேஅவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரேஅவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரேஅவர்


Potruvom Thuthi satruvom போற்றுவோம் துதி சாற்றுவோம்

 




போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
ஏற்றுவோம் பரன் நாம மதை
பாடுவோம் புகழ் பாடுவோம் தினம்
நாடுவோம் அவர் பாதமதை

1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும்
நம் குறை தீர்த்து நம்மோடிருந்து
நன்மைகள் தீமைகள் எதுவரினும்
நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை

2. சோதனை வந்திடும் நேரத்திலும்
வேதனை நிந்தனை சூழ்ந்திடினும்
நாதனே என்று நாம் நோக்குகையில்
ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை

3. உற்றார் உறவினர் கைவிட்டாலும்
பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும்
சற்றுமே நான் மறவேன் எனவே
பற்றுடன் அணைத்திடும் பார்த்திபன் ஏசுவை


Friday, 1 July 2022

Mahibaniye Anuthiname மகிபனையே அனுதினமே


 


மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன்தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால்மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரேமகிபனையே

3. அழைத்தாரே சுவிசேஷத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம்மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவேமகிபனையே


Belan Ontrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா


 

பெலன் ஒன்றும் இல்லை தேவா

ஆவியால் பெலப்படுத்தும்

சத்துவம் இல்லாத எனக்கு

சத்துவம் தந்தருளும் 

 

1. மானின் கால்களைப் போல

என் கால்களை பெலப்படுத்தும்

நூனின் குமாரனைப் போல 

என்னையும் பெலப்படுத்தும் 

 

2. சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்

சோதனை வெல்ல உதவும்

மாய உலகத்தை ஜெயிக்க

என்னையும் பெலப்படுத்தும் 

 

3. சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்

வழுவாமல் காத்து நடத்தும்

கழுகு போல் செட்டைகள் அடித்து 

உயரே எழும்ப செய்யும்  

Wednesday, 29 June 2022

Yesuvin Anbil Moolgavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்


 

1. இயேசுவின் அன்பில் மூழ்கவும்

  நேசத்தின் ஆழம் பார்க்கவும்

  இன்னமும் தீரா வாஞ்சையே

  என்னில் உண்டாகுகின்றதே.

 

  ஆட்கொண்டவர் நேசம்

  ஈடேற்றின  நேசம்

  இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்

  உன்னத அன்பைப் போற்றுவேன்.

 

2. இயேசுவின் சொல்லும் சித்தமும்

  ஆசையுள்ளோனாய்ச்  செய்யவும்

  தேவ ஒத்தாசை நம்புவேன்

  ஆவியின் பேரில் சாருவேன்

 

3. நாதரின் இன்ப சத்தமும்

  வேதத்தில் கேட்டு நித்தமும்

  ஆத்தும நன்மை நாடுவேன்

  நீதியின் பாதை செல்லுவேன்.

 

4. இயேசுவின் இராஜரீகமும்

  ஆசித்த மா செங்கோன்மையும்

  விண்ணிலே தோன்றும் வண்ணமாய்

  மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.


Tuesday, 28 June 2022

Ella Namathirkum எல்லா நாமத்திற்கும்


 

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

இயேசுவின் நாமமே

எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்

நாமம் இயேசுவின் நாமமே

 

இயேசு நாமமே ஜெயம் ஜெயமே

சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்

 

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே

இயேசுவின் நாமமே

நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே

இயேசுவின் நாமமே

சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே

கிறிஸ்தேசுவின் நாமமே

 

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே

இயேசுவின் நாமமே

தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே

கிறிஸ்தேசுவின் நாமமே

Monday, 27 June 2022

Vaanathil oar Natchathiram வானத்தில் ஓர் நட்சத்திரம்


 

வானத்தில் ஓர் நட்சத்திரம்

என் உள்ளத்தில் இயேசு ராஜன்

 

 1. மாட்டுக்கொட்டினிலே தேவன் பிறந்தாரே

ஏழைக் கோலமாய் என் இயேசு பிறந்தாரே

 

2. தேவ தூதர்களும் விண்ணில் ஆர்ப்பரிக்க

மண்ணில் மனிதனாய் என் மன்னன் பிறந்தாரே

 

3. தேடி வந்த ராஜன் வாசம் செய்கிறாரே

  உள்ளம் நிறைந்து நாம் அவரைப் போற்றிடுவோம்