Friday, 1 July 2022

Belan Ontrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா


 

பெலன் ஒன்றும் இல்லை தேவா

ஆவியால் பெலப்படுத்தும்

சத்துவம் இல்லாத எனக்கு

சத்துவம் தந்தருளும் 

 

1. மானின் கால்களைப் போல

என் கால்களை பெலப்படுத்தும்

நூனின் குமாரனைப் போல 

என்னையும் பெலப்படுத்தும் 

 

2. சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்

சோதனை வெல்ல உதவும்

மாய உலகத்தை ஜெயிக்க

என்னையும் பெலப்படுத்தும் 

 

3. சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்

வழுவாமல் காத்து நடத்தும்

கழுகு போல் செட்டைகள் அடித்து 

உயரே எழும்ப செய்யும்  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.