Monday, 4 July 2022

Potruvom Thuthi satruvom போற்றுவோம் துதி சாற்றுவோம்

 




போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
ஏற்றுவோம் பரன் நாம மதை
பாடுவோம் புகழ் பாடுவோம் தினம்
நாடுவோம் அவர் பாதமதை

1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும்
நம் குறை தீர்த்து நம்மோடிருந்து
நன்மைகள் தீமைகள் எதுவரினும்
நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை

2. சோதனை வந்திடும் நேரத்திலும்
வேதனை நிந்தனை சூழ்ந்திடினும்
நாதனே என்று நாம் நோக்குகையில்
ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை

3. உற்றார் உறவினர் கைவிட்டாலும்
பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும்
சற்றுமே நான் மறவேன் எனவே
பற்றுடன் அணைத்திடும் பார்த்திபன் ஏசுவை


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.