என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்
1. பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி
2. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்
உயிர்த்தெழுந்ததின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
பரலோக வாழ்வென்பேன்
3. ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.