மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா -- எங்க
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா
1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே… வல்லவரே…
எங்களை வாழவைக்கும் அன்பு
தெய்வமே
2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றினின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே ... அதிசயமே ...
ஆனந்தமே பரம ஆனந்தமே -- இயேசு
3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரே… உயர்ந்தவரே…
இருள் நீக்கும் ஒளிவிளக்கே -- உள்ளத்தின்
4. தாயைப்போல என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ ... அப்பா அல்லோ...
பிள்ளை அல்லோ செல்லப் பிள்ளை
அல்லோ
