Monday, 16 May 2022

Idukkamana Vasal Valiye இடுக்கமான வாசல் வழியே


 


இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை

2. நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம் - சிலுவை

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு - சிலுவை

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது - சிலுவை


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.