Thursday, 19 May 2022

Raja Neer Seitha Nanmaigal ராஜா நீர் செய்த நன்மைகள்


 


ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
நான் ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம்

நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கறைகளைப்  போக்கி
கூடவே வந்தீரையா

6. உமக்காக வாழ உம்  நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வாழ ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.