Monday 23 May 2022

Anathi Snegathal அநாதி சிநேகத்தால்


 


அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1. அனாதையாய்  அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே

2. நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

3. தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.