உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதவே அப்பா
1. அன்றாட உணவை ஒவ்வொரு
நாளும்
எனக்குத் தாரும் ஐயா
2. பிறர் குற்றம்
மன்னித்தோம் ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே
3. சோதிக்கும் சாத்தானின்
சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா
4. ஆட்சியும் வல்லமை
மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள்
ஓயணும்
சமாதானம் வரணுமே
6. ஊழியர் எழும்பணும் ஓடி
உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே
7. உமக்காய் வாழணும் உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே
8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா
9. ஆவியில்
நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள்
இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே