Monday, 18 April 2022

Elshadai Enthan Thunai எல்ஷடாய் எந்தன் துணை


 


எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்


Sunday, 17 April 2022

Ejamanane En Yesu Rajane எஜமானனே என் இயேசு ராஜனே


 


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்குஎன்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்


Varum Varum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே


 


வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமேவாரும்

2. தாய் தந்தை நீர் தாமே தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையேவாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமேவாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமேவாரும்

5. காருண்ய தேவனே கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்வாரும்

6. மன்னா உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனேவாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமேவாரும்

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்வாரும்


Saturday, 16 April 2022

Agora Kasthi Pattorai அகோர கஸ்தி பட்டோராய்


 


1. அகோர கஸ்தி பட்டோராய்

வதைந்து வாடி நொந்து

குரூர ஆணி தைத்தோராய்

தலையைச் சாய்த்துக்கொண்டு

மரிக்கிறார் மா நிந்தையாய்

துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்

மரித்த இவர் யாவர்

 

2. சமஸ்தமும் மா வடிவாய்

சிஷ்டித்து ஆண்டுவந்த

எக்காலமும் விடாமையாய்

விண்ணோரால் துதிபெற்ற

மா தெய்வ மைந்தன் இவரோ

இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ

பிதாவின் திவ்விய மைந்தன்

 

3. அநாதி ஜோதி நரனாய்

பூலோகத்தில் ஜென்மித்து

அரூபி ரூபி தயவாய்

என் கோலத்தை எடுத்து

மெய்யான பலியாய் மாண்டார்

நிறைந்த மீட்புண்டாக்கினார்

என் ரட்சகர் என் நாதர்.


Friday, 15 April 2022

Devane Aarathikkintren தேவனே ஆராதிக்கின்றேன்


 


தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே


Thursday, 14 April 2022

Yennappaa Seiyanum Naan என்னப்பா செய்யணும் நான்


 


என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பாஎன்னப்பா

1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

3. இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்


Tuesday, 12 April 2022

Yesu Raja Vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

 




இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னேநம்ம

5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்

6. கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே