Friday, 25 February 2022

Kiristhuvukul Valum Enaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு


 


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார் இயேசு

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்


Thursday, 24 February 2022

Kannokki Parum Deva கண்ணோக்கி பாரும் தேவா


 


கண்ணோக்கி பாரும் தேவா என்னை

கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

1. அசுத்த ஆவியை எடுத்தீரே

பரிசுத்த ஆவியை கொடுத்தீரே

கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே

உம் நாமம் எந்தன் கெம்பீரமே

 

2. பயமுள்ள ஆவியை எடுத்தீரே

பலமுள்ள ஆவியை கொடுத்தீரே

தேவாதி தேவனே அப்பா பிதாவே

உம் பாதம் எந்தன் தஞ்சமே

 

3. உலகத்தின் ஆவியை எடுத்தீரே

உன்னத ஆவியை கொடுத்தீரே

ராஜாதி ராஜனே அப்பா பிதாவே

உம் கிருபை என்றும் போதுமே


Wednesday, 23 February 2022

Nadanamadi Sthotharipen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்


 

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம்ஐயா

 

2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காகஐயா

 

3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டுஐயா

 

4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே


Tuesday, 22 February 2022

Entrum Aanantham என்றும் ஆனந்தம்

 



என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)

1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்

6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்


Monday, 21 February 2022

Ummai Pirinthu உம்மைப் பிரிந்து


 

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

இயேசையா இயேசையா

 

1. திராட்சை செடியின் கொடியாக

உம்மில் நிலைத்திருப்பேன்

மிகுந்த கனி கொடுப்பேன்

உம் சீடானாயிருப்பேன்நான்

 

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி

உம் கரம் வைக்கின்றீர்

உமக்கு மறைவாய் எங்கே போவேன்

உம்மைவிட்டு எங்கே ஓடுவேன்நான்

 

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே

பயந்து போக மாட்டேன்

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்

சோர்ந்து போகமாட்டேன்நான்

 

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்

என்னை சூழ்ந்து உள்ளீர்

என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்

எல்லாம் உம் கிருபைஐயா

 

5.கர்த்தாவே என்னை ஆராய்ந்து

அறிந்து இருக்கின்றீர்

உட்காருதலையும் எழுதலையும்

அறிந்து இருக்கின்றீர்


Saturday, 19 February 2022

Nantri Nantri Nantri Entru நன்றி நன்றி நன்றி என்று


 


நன்றி நன்றி  நன்றி என்று

நாள்தோறும் பாடிடுவோம்

 

1. வல்லவரே நல்லவரே

 

2. காண்பவரே காப்பவரே

 

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

 

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

 

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

 

6. புது வாழ்வு எனக்குத் தந்தீர்


Friday, 18 February 2022

Ummodu Irukkanume உம்மோடு இருக்கணுமே


 


உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மைப் போல் மாறணுமே

உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து

வெளிச்சம் கொடுக்கணுமே

 

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்

மரமாய் மாறணுமே

எல்லா நாளும் இலைகளோடு

கனிகள் கொடுக்கணுமே

 

2. உலகப் பெருமை இன்பமெல்லாம்

குப்பையாய் மாறணுமே

உம்மையே என் கண்முன் வைத்து

ஓடி ஜெயிக்கணுமே

 

3. ஆத்ம பார உருக்கத்தோடு

அழுது புலம்பணுமே

இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்

மேய்ப்பன் ஆகணுமே

 

4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு

பிரசங்கம் பண்ணணுமே

கடினமான பாறை இதயம்

உடைத்து நொறுக்கணுமே

 

5. வார்த்தை என்னும் வாளையேந்தி

யுத்தம் செய்யணுமே

விசுவாசம் என்னும் கேடயத்தால்

பிசாசை வெல்லணுமே