Monday, 21 February 2022

Ummai Pirinthu உம்மைப் பிரிந்து


 

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

இயேசையா இயேசையா

 

1. திராட்சை செடியின் கொடியாக

உம்மில் நிலைத்திருப்பேன்

மிகுந்த கனி கொடுப்பேன்

உம் சீடானாயிருப்பேன்நான்

 

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி

உம் கரம் வைக்கின்றீர்

உமக்கு மறைவாய் எங்கே போவேன்

உம்மைவிட்டு எங்கே ஓடுவேன்நான்

 

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே

பயந்து போக மாட்டேன்

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்

சோர்ந்து போகமாட்டேன்நான்

 

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்

என்னை சூழ்ந்து உள்ளீர்

என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்

எல்லாம் உம் கிருபைஐயா

 

5.கர்த்தாவே என்னை ஆராய்ந்து

அறிந்து இருக்கின்றீர்

உட்காருதலையும் எழுதலையும்

அறிந்து இருக்கின்றீர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.