1. வாரும் மா தேவனே
உம்மைத் துதிக்கவே
துணை செய்யும்
உமக்கே கனத்தை
உமக்கே நன்றியை
உமக்கே துதியை
செலுத்துவேன்
2. அநாதி வார்த்தையே
அன்பாக நித்தமே
என்னோடிரும்
என்னைப் போதிக்கவும்
உம்மைப் போலாக்கவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
அருள் செய்யும்
3. மாசற்ற ஆவியே
அடியேன் நெஞ்சிலே
தரித்திரும்
என் ஆசை அறிவீர்
குறைவை நீக்குவீர்
திருப்தியாக்குவீர்
அன்பாகவும்
4. திரியேக தேவனே
நித்திய ஜீவனே
உம்மாலேயே
மானிடர் யாவரும்
இகபரத்திலும்
விரும்பும் பாக்கியம்
கிடைக்குமே