Monday, 10 January 2022

Arputhar Arputhar Yesu Arputhar அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்


 

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

இயேசு அற்புதர்

அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்

இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்அற்புதர்

 

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்

தீர்த்த இயேசு அற்புதர்

எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்

காத்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்போனிலும் எங்கள்

இயேசு பெரியவர் அற்புதரே

உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்

இயேசு அற்புதரேஎல்லோரும்

 

2. அலைகடல் மேலே நடந்தவர்

எங்கள் இயேசு அற்புதர்

அகோர காற்றையும் அமைதிப்படுத்திய

இயேசு அற்புதர்

அறைந்தனர் சிலுவையிலே

ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே

ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த

இயேசு அற்புதரேஎல்லோரும்

Friday, 7 January 2022

Yesu Nesikirar Avar இயேசு நேசிக்கிறார்


 

இயேசு நேசிக்கிறார்

அவர் அன்பாய் நேசிக்கிறார்

பாவி நான் என்றாலும்

தள்ளிவிடாமல் பாதுகாக்கின்றார்

கிருபை தருகின்றார்

 

1. அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தார்

ஆபத்துக்  காலத்திலே அரணான துணையானார்

ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்

அரவணைத்தாரே அன்பை அளித்தாரே

 

2. மாசற்ற தம் உதிரம் எனக்காக  சிலுவையிலே

மனதார அளித்தவரை மனம் நோகச்செய்தேனே

மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை

மாற்றி அமைத்தாரே மகிழச்  செய்தாரே


Thursday, 6 January 2022

Yesu Kiristhuvin Anbu இயேசு கிறிஸ்துவின் அன்பு


 


இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

1. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

2. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்

3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பாரசிலுவை சுமந்தேகுதே


Wednesday, 5 January 2022

Kasantha Mara Mathuramagum கசந்த மாரா மதுரமாகும்


 


1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார்

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்


Tuesday, 4 January 2022

Appa Naan Ummai அப்பா நான் உம்மை


 


அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

 

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்

நீரே என் ஜீவனன்றோ

 

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

நான் உந்தன் பிள்ளையன்றோ

 

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே

நான் உந்தன் ஆட்டுக்குட்டி

 

4. ஜீவ நீருற்று நீர் தானே

உந்தன் மேல் தாகம் கொண்டேன்

 

5. என் பாடுகள் சுமந்து கொண்டீர்

என் துக்கம் ஏற்றுக்கொண்டீர்


Monday, 3 January 2022

Entha Neramum Eppothumae எந்த நேரமும் எப்போதுமே


 


எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமேஎந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவசித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமேஎந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமேஎந்த

4. ஒவ்வொரு ஆண்டும் முழுவதும்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத்தத்தம் தந்து நடத்துவார்எந்த

5. குமாரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம்எந்த


Senaigalin Devan Nammodu Irukkintrar சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்


 


சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

 

1. எரிகோ போன்ற சோதனைகள்

எதிரிட்டு வந்தாலும்

தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்

ஜெயத்தைத் தந்திடுவார்  - சேனை

 

2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்

பாக்கியம் அடைந்திடுவோம்

உயர்த்திடுவார் தாங்கிடுவார்

நன்மையால் நிரப்பிடுவார்   - சேனை

 

3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும்

ஜெய கர்த்தர் நமக்குண்டு

ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்

ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் - சேனை

 

4. ஆவியின் வரத்தை தந்திடுவார்

ஆவியை பொழிந்திடுவார்

ஏகிடுவாய் எழும்பிடுவாய்

சீயோனில் சேர்ந்திடுவாய்  - சேனை

 

5. சபையோரே நாம் எழும்பிடுவோம்

வசனத்தைப் பிடித்திடுவோம்

வென்றிடுவோம் சென்றிடுவோம்

ஊழியம் செய்திடுவோம்  - சேனை