இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார்
பாவி நான் என்றாலும்
தள்ளிவிடாமல் பாதுகாக்கின்றார்
கிருபை தருகின்றார்
1. அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தார்
ஆபத்துக் காலத்திலே அரணான துணையானார்
ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே
2. மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோகச்செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி
அமைத்தாரே மகிழச் செய்தாரே