Tuesday, 28 December 2021

Uyirodu Eluntha En Yesuvae உயிரோடு எழுந்த என் இயேசுவே


 


உயிரோடு எழுந்த என் இயேசுவே

நான் வாழுவேன் உமக்காகவே

நீர் ஒருவரே ஆண்டவர்

நீர் ஒருவரே ரட்சகர்

 

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சர்வ வல்லவரே

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

சமாதான காரணரே

 

1. மரித்து போன அந்த லாசரு

அன்று தேடியே இயேசு வந்தீரே

உந்தன் வாயின் வார்த்தையால்

அங்கு ஜீவன் வந்தது

 

2. சிலுவையின் அந்த போரிலே

இயேசு நீரே மரித்து போனீரே

ஆனால் உயிரோடு எழுந்தீரே

அந்த எதிரியை ஜெயித்தீரே


Monday, 27 December 2021

Ellai illa Kirubai எல்லை இல்லா கிருபை


 

எல்லை இல்லா கிருபை

என்னைச் சூழ்ந்து கொள்ளும்

இந்தப் புதிய நாளில்

உமது அருளைப் பொழியும்

 

1. மனிதன் கதவை அடைப்பான்

என் தேவன் அதையே திறப்பார்

மனிதன் அன்பு மாறும்

என் நேசர் என்றும் மாறார்

 

2. பூர்வ நாளை நினைத்தேன்

உம் புண்ணிய செயலை உணர்ந்தேன்

எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன்

என் இயேசுவை என்றும் மறவேன்

 

3. நெஞ்சம் நொந்த போது

தஞ்சம் தந்த தேவன்

நான் வாடி நின்ற போது

என்னைத் தேடி வந்த தேவன்

 

4. வீசும் புயலின் நடுவில்

கலங்கும் வாழ்க்கை படகில்

இயேசு துணையாய் வருவார்

என்னைப் பாசத்தோடு காப்பார்


Sunday, 26 December 2021

Jebame Jeyam Jebam Jeyam ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்


 

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

1. சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே பேராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

2. அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
ஜெபமே பேராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்

3. அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
ஜெபமே பேராயுதம்
போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்


Unthan Thunaiyivarae உந்தன் துணையிவரே


 


1.உந்தன் துணையிவரே

என்றும் காத்திடுவார் இவர்

கலங்காதே பயப்படாதே

மீட்பர் தாங்கிடுவார்

 

பொன்னேசு இராஜனிவர்

எந்நாளும் துணையிவரே

அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா ஆமென்

 

2. உன்னைத் தெரிந்தவரே

உன்னை நடத்திடுவார் என்றும்

அழைப்பதனை அறிந்துணர்ந்து

கிரியை செய்திடுவாய் – பொன்

 

3. உன்னை பெலப்படுத்தி

ஜெயமாய் நடத்திடுவார் இவர்

முன்னேறிச் சுதந்தரிப்பாய்

தேவ வாக்குகளை- பொன்

 

4. அன்பின் தேவனிவர்

உயர்த்தி தாங்கிடுவார்  என்றும்

தவறியே நீ விழுந்திடாமல்

காத்து தாங்கிடுவார் – பொன்

 

5. உந்தன் குரலதனை

கேட்டுச் செவி கொடுப்பார்

கூர்மையான யந்திரமாய்

மாற்றி உபயோகிப்பார்   -   பொன்


Saturday, 25 December 2021

Karthar Devan Ennilae கர்த்தர் தேவன் என்னிலே


 


கர்த்தர் தேவன் என்னிலே
வாசம் செய்யும் நாளிது
அக்கினியின் மதிலாக
அரவணைத்து நிற்கின்றார்

1.கிறிஸ்து இயேசு மகிமையின்
இரகசியமாய் என்னிலே
வாசம் செய்து வருவதே
இரகசியம் இரகசியம்

2.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் என்னிலே
கிரியை செய்யும் வல்லமை
ஆஹா என்ன அதிசயம்

3.எந்தன் தேவன் கண்ணானால்
கண்ணின் மணியாய் நானிருப்பேன்
என்னைத் தொடுவோன் அவரது
கண்ணின் மணியைத் தொடுவானாம்

4.பராக்கிரமும் அவரே தான்
பட்டயம் அவர் கையில் நானாவேன்
என்னை வில்லாய் நாணேற்றி
எதிரியினை வெல்லுவார்

5.எந்தன் இராஜா வருகின்றார்
அவரின் மந்தையை இரட்சிக்க
அவரின் நேசக் கொடிகளின்
கிரீடத்தில் நான் பதித்துள்ளேன்


Thursday, 23 December 2021

Mannan Yesu Varukintraar மன்னன் இயேசு வருகின்றார்


 

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையானவர்அல்லேலூயா

2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதேஅல்லேலூயா

3. வெண்குதிரை மேல் உலாவ வருகின்றார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குது
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதுஅல்லேலூயா

 


Wednesday, 22 December 2021

En Nesarae En Aathma என் நேசரே என் ஆத்ம


 

1. En nesarae en aathma nayagarae vanthiduveer

En kanneer thudaithidavae ummil naan sernthidavae

En yesuvae mathya vanil vegam vanthiduveer

 

2. Vin megathil thootha ganangaludan varum neram

Enakai kayapattatham ponmugam mutham thanthida

Thaneer thedum mangalai pola nanum vanjikiraen

 

3. Ven vasthiram tharithu uyirtheluntha sutharudan

Sernthu nin samoogathilae alleluah padida

Puthiyulla kanigai pol epothum aayathamae

 

4. Soorya chandra natchathirangalai kadanthu sorka veetil

Palingu nathiyorathil jeeva virutchathin nilalil

Nithya veetil sernthida vanjikiraen en nesarae