கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்
கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம் --- கர்த்தர் இயேசு
1. சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே
கர்த்தர்
ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம்
-- கர்த்தர் இயேசு
2. வானம்
பூமி யாவும் முற்றும் மாறிப் போயினும்
தேவ வார்த்தை என்றுமாய் நிலைத்து நிற்குமே
சத்திய
வாக்கினில் உறுதி யடைந்துமே
சத்திய தேவன் வாக்கை நம்பி முன் செல்லுவோம்
--- கர்த்தர் இயேசு
3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
முற்றுமாக
நம்பியே முன்னே செல்லுவோம்
கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்
--- கர்த்தர் இயேசு