Friday 19 November 2021




இஸ்ரவேலின் ஜெய பெலனே

சேனை அதிபதியே

முன்னே செல்லும் எங்கள் இயேசு

வெற்றி சிறந்தவரே

 

1. எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன

திகைத்து தவித்தனரே

ஒளியில் என்றும் இஸ்ரவேலை

நடத்தி நிதமே காத்திடுவார்

 

2. கடலைப் பிளந்து வழியைத் திறப்பார்

கர்த்தர் பெரியவரே

பார்வோன் சேனை தொடர்ந்து வரினும்

துணிந்து முன்னே சென்றிடுவோம்

 

3. தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும்

சத்ரு வீழ்ந்திடுவான்

ஓங்கும் புயமும் தேவ கரமும்

தாங்கி நம்மை நடத்திடுமே

 

4. பாலைவனத்தில் பசியை ஆற்ற

மன்னா அளித்தனரே

நமது ஆத்ம தாகம் தீர்த்து

புதிய பெலனை அளித்திடுவார்

 

5. பொங்கி எழும்பும் யோர்தான் நதியை

தடுத்து நிறுத்தினாரே

அல்லல் யாவும் நீக்கி நம்மை

அக்கரையில் சேர்த்திடுவார்

Thursday 18 November 2021

Aranum Kotaiyum அரணும் கோட்டையும்



 




அரணும் கோட்டையும்

பெலனாய் காப்பவர்

திடமாய் ஜெயித்திட

எனது என்றென்றும் துணையே

 

1. ஜீவ நம்பிக்கை நல்க

இயேசு மரித்து எழுந்தார்

அழிந்திடாத உரிமை பெறவே

மறு ஜென்மம் அடையச் செய்தார் - அரணும்

 

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

மகிமை நம்பிக்கை ஈந்தார்

நீதிமானை செழிக்கச் செய்து

என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்

 

3. தம்மால் மதிலை தாண்டி

உம்மால் சேனைக்குள் பாய்வேன்

எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்

 

4. வாழ்வில் முன்னேறிச் செல்ல

நல்ல நம்பிக்கை ஈந்தார்

கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்

வளர்ந்தே நிலைத்திடுவோம்   - அரணும்

 

5. இருளை வெளிச்சமாக்க

ஒளியை அருளிச் செய்வார்

எந்தன் தீபம் நின்று எரிய

என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்


Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


 

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


Tuesday 16 November 2021

என் மீட்பர் சென்ற பாதையில்


 


1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (2)
சிலுவையை சிலுவையை
நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார்
மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில்

6. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்


Sunday 14 November 2021

Anbe Anbe Anbe அன்பே அன்பே அன்பே


 


அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா  என் மேல்
உம் தயை பெரிதையாஅன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ  அன்பின்
ஆழம் அறிவேனோஅன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே  எனையும்
அணைத்தீர் அன்பாலேஅன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா  அன்பு
வாடாதே ஐயாஅன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோஅன்பே


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்


 


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

 

1. அற்புதமான அன்பே – என்னில்

பொற்பரன் பாராட்டும் தூய அன்பே

என்றும் மாறா தேவ அன்பே

என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

 

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே

தியாகமான தேவ அன்பே

திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

 

3. மாய உலக அன்பை – நம்பி

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே

என்னை வென்ற தேவ அன்பே

என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

 

4. ஆதரவான அன்பே – நித்தம்

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே

உன்னதமான  தேவ அன்பே

உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

 

5. வாக்கு மாறாத அன்பே – திரு

வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே

சர்வ வல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்


Friday 12 November 2021

Thuthiye Thuthiye Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே


 


துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே

1. தூதகணங்கள் தூயவருந்தன்
பாத சேவை செய்து பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் – துதியே

2. அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர் – துதியே

3. பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்  – துதியே

4. அந்தகாரமதின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் – துதியே

5. மீட்கப்பட்டவர் ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர் – துதியே

6. கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி தேவனே
துத்தியம் செய்திடுவோம் – துதியே