Wednesday 27 October 2021

Ellaam Yesuvae எல்லாம் இயேசுவே


 


எல்லாம் இயேசுவே

எனக்கெல்லாம் இயேசுவே

தொல்லை மிகு இவ்வுலகில்

துணை இயேசுவே

 

1. ஆயனும் சகாயனும்

நேயனுமும் உ பாயனும்

நாயனும் எனக்கன்பான

ஞானமணவாளனும் --- எல்லாம்

 

2. தந்தை தாய் இனம்  ஜனம்

பந்துளோர் சிநேகிதர்

சந்தோட சகலயோக

சம்பூரண பாக்யமும் --- எல்லாம்

 

3. கவலையில் ஆறுதலும்

கங்குலிலென் ஜோதியும்

கஷ்ட நோய்ப் படுக்கையிலே

கை கண்ட  அவிழ்தமும் --- எல்லாம்

 

4. போதகப் பிதாவுமென்

போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங்

கூட்டாளியுமென் தோழனும் --- எல்லாம்

 

5. அணியும்  ஆபரணமும்

ஆஸ்தியும் சம்பாத்யமும்

பிணையாளியும் மீட்பருமென்

பிரிய மத்தியஸ்தனும் --- எல்லாம்

 

6. ஆன ஜீவ அப்பமும்

ஆவலுமென் காவலும்

ஞானகீதமும் சதுரும்

நாட்டமும் கொண்டாட்டமும் --- எல்லாம்


Aar Ivar Aaro ஆர் இவர் ஆரோ


 


ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ

1. ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ

2. ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ

3. கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றி வைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ

4. சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ


Tuesday 26 October 2021

Yesuvin Marbil Naan Sainthumae இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே


 

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே

இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்

பாரிலே பாடுகள் மறந்து நான்

பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

 

வாழ்த்துவேன் போற்றுவேன்

உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா

 

2. சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்

வேதனை யான வேளை வந்திடும்

என் மன பாரம் எல்லாம் மாறிடும்

தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்   - வாழ்த்து

 

3. சிநேகிதர் எல்லாம் கைவிட்டிடினும்

நேசராய் இயேசென்னோடிருப்பதால்

மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே

மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்   - வாழ்த்து

 

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே

என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே

இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்   - வாழ்த்து

Aathumamae En Mulu Ullamae ஆத்துமமே என் முழு உள்ளமே


 


ஆத்துமமே என் முழு உள்ளமேஉன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்தஉன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ளஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாதஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலானஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்தஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமேஆத்துமமே


Monday 25 October 2021

Kaarirul Velayil காரிருள் வேளையில்


 

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவுகாரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவுகாரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவுகாரிருள்

 

Immattum Kirubai Thantha Deva இம்மட்டும் கிருபை தந்த தேவா


 

இம்மட்டும் கிருபை தந்த தேவா
இனிமேலும் கிருபை தாரும் மூவா
இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு நீர் என்னில் உருவாகவே
உம்மைக் காணவே

1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லை சூழ்கையிலே
இன்ப ஒளியை எனில் வீசியேஇருள் நீக்குமே

2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மைத் துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்உமைத் துதிக்க

3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றுமே உம்மில் நான் நிற்கவே
அன்றும் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெரு வெள்ளமாய் - புரண்டோடுதே

4. சத்துருவான சாத்தான் என்னையே
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
கர்த்தனே ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையைஎன்னில் ஊற்றும்

5. ஜெபத்தில் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினால் நான் ஜெயிப்பேன்அல்லேலூயா

Sunday 24 October 2021

Paaduvaen Paravasamaguvaen பாடுவேன் பரவசமாகுவேன்


 


பாடுவேன் பரவசமாகுவேன்

பறந்தோடும் இன்னலே


1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து

நிலை கலங்கி ஆழ்த்தையில்

அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து

கடத்தியே சென்ற கர்த்தனை --- பாடுவேன்


2.என்று மாறும் எந்தன் துயரம்

என்றே மனமும் ஏங்கையில்

மாராவின் கசப்பை மதுரமுமாக்கி

மகிழ்வித்த மகிபனையே  --- பாடுவேன்


3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்

உதவுவாரற்றுப் போகையில்

கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து

தாகம்  தீர்த்த தயவை  --- பாடுவேன்


4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி

பட்டினி சஞ்சலம் நேர்கையில்

வான மன்னாவால் ஞானமாய் போஷித்த

காணாத மன்னா இயேசுவை --- பாடுவேன்


5. எண்ணிறந்த எதிர்ப்பினூடே

ஏளனமும் சேர்ந்து தாக்கையில்

துன்ப பெருக்கிலும் இன்முகம் காட்டி

ஜெயகீதம் ஈந்தவரை --- பாடுவேன்