Monday, 18 October 2021

Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்



 



உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

1. தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

2. உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

3. என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்

4. எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்








Sunday, 17 October 2021

Karthathi Karthanai கர்த்தாதி கரத்தனை


 


கர்த்தாதி கரத்தனை
இராஜாதி இராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன்
நான் கெம்பீரித்து பாடுவேன்

ஆடுவேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்  
அன்பரின் பாதத்தில் அமர்ந்திடுவேன்  --- கர்த்தாதி
 

1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரைத் தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே  --- ஆடுவேன்

2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குதத்தம் செய்தவர் அவர்
வாக்கொன்றும் மாறிடாரே --- ஆடுவேன்

3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார் --- ஆடுவேன்

4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீரூற்றாய் மாற்றிடுவார்
திறந்த வாசல் ஒன்றை அவர்
எனக்காக வைத்திடுவார் --- ஆடுவேன்


Kalikooruvom Karthar Nam Patchamae களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே


 


1. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்

கர்த்தர் நம் பட்சம்
கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்
யார் யார் யார்
யார் எதிர்க்க வல்லோர்
யார் வல்லோர்

2. திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்
உண்மை பக்தியாய் நாள்தோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்.

3. வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும் இது மெய் மெய்யே.

4. நிலைத்திருப்போம்  கர்த்தரின் கட்டினில்
அதால் நித்ய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Saturday, 16 October 2021

Yesuvin Namamae Thirunamam இயேசுவின் நாமமே திருநாமம்


 

இயேசுவின் நாமமே திருநாமம்முழு
இருதயத்தாற் தொழுவோம் நாமும்

1. காசினியி  லதனுக் கிணையில்லையே  விசு
வாசித்த வர்களுக்குக் குறைவில்லையே  --- இயேசு

2. இத்தரையில் மெத்தவதி சய நாமம்  அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம்  --- இயேசு

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்  இது
சத்திய விதேய மனமொத்த நாமம் --- இயேசு 

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்  நமை
அண்டிடும் பேய் பயந்தோடு தேவநாமம் --- இயேசு

5. பட்சமுடன் ரட்சை செயு முபகாரி  தீய
பாவப் பிணி தவிர்க்கும் பரிகாரி  --- இயேசு

Friday, 15 October 2021

Yesuvai Nambinor Mandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை


 

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Thursday, 14 October 2021

Anbin Deva Narkarunaiyilae அன்பின் தேவ நற்கருணையிலே


 

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
காண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற் கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொழிவாம் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ


 

அரசனைக் காணாமலிருப்போமோநமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ

 பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோயூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோயூத

                                 

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றேஇஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமேயூதஅரசனை

 

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்

பொன்னடி வணங்குவோம் நடவுமின்றேயூதஅரசனை

 

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்யூதஅரசனை

 

4. அரமனையில் அவரைக் காணோமேஅதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே

மறைந்த உடு அதோ பார் திரும்பினதேபெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்யூதஅரசனை

 

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டேராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல்யூதஅரசனை