Saturday 16 October 2021

Yesuvin Namamae Thirunamam இயேசுவின் நாமமே திருநாமம்


 

இயேசுவின் நாமமே திருநாமம்முழு
இருதயத்தாற் தொழுவோம் நாமும்

1. காசினியி  லதனுக் கிணையில்லையே  விசு
வாசித்த வர்களுக்குக் குறைவில்லையே  --- இயேசு

2. இத்தரையில் மெத்தவதி சய நாமம்  அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம்  --- இயேசு

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்  இது
சத்திய விதேய மனமொத்த நாமம் --- இயேசு 

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்  நமை
அண்டிடும் பேய் பயந்தோடு தேவநாமம் --- இயேசு

5. பட்சமுடன் ரட்சை செயு முபகாரி  தீய
பாவப் பிணி தவிர்க்கும் பரிகாரி  --- இயேசு

Friday 15 October 2021

Yesuvai Nambinor Mandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை


 

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Thursday 14 October 2021

Anbin Deva Narkarunaiyilae அன்பின் தேவ நற்கருணையிலே


 

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
காண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற் கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொழிவாம் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ


 

அரசனைக் காணாமலிருப்போமோநமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ

 பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோயூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோயூத

                                 

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றேஇஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமேயூதஅரசனை

 

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்

பொன்னடி வணங்குவோம் நடவுமின்றேயூதஅரசனை

 

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்யூதஅரசனை

 

4. அரமனையில் அவரைக் காணோமேஅதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே

மறைந்த உடு அதோ பார் திரும்பினதேபெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்யூதஅரசனை

 

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டேராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல்யூதஅரசனை

Wednesday 13 October 2021

Desathaargal Yaarum Vanthu தேசத்தார்கள் யாரும் வந்து


 

1. தேசத்தார்கள் யாரும் வந்து

சுவிசேஷ வார்த்தையே

கேட்டு உந்தன் ஜோதி கண்டு

சேவிப்பார்கள் என்றீரே

கர்த்தாவே

வாக்கை நிறைவேற்றுமேன்

 

2. வையகம் எல்லாம் மிகுந்த

புத்தியீனமுள்ளது

அதால் மாந்தர்க்குள் புகுந்த

கேடு மா பலத்தது

கர்த்தாவே

மாந்தரை நீர் ரட்சியும்

 

3. உம்முடைய வார்த்தை சொல்ல

போகும் போதகர்களை

நீர் பலப்படுத்தி, நல்ல

புத்தி தந்து நேசத்தை

ஆவியாலே

ஊழியர்க்கு ஈந்திடும்

 

4. வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்

உண்மையை உணரவும்

அங்கங்குள்ள தீயோன் சக்தி

யாவும் நீங்கிப் போகவும்

தூய வல்ல

ஆவியைக் கடாட்சியும்

Tuesday 12 October 2021

Raasa Raasa Pitha ராச ராச பிதா


 

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மகராச

1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே சுந்த்ர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே இறையான சாந்தனே மறை

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
பத ஆமனாமனா சுதனாமனாமனா சித

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
கிருபா கரா நரா சருவேசுராபரா சிரி

4. வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான் சுரராடு கோவினான் பர

Anuppum Deva Um Aaviyinai அனுப்பும் தேவா உம் ஆவியினை


 

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே

1. சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

2. பெந்தேகோஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

3. மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

4. சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

5. இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட