Friday, 8 October 2021

Yaar Vendum Naatha யார் வேண்டும் நாதா


 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்க்கை  வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதோ
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

4. உற்றாரின் பாசம் உடன் வருமோ
மற்றோரின் நேசம் மாறாததோ
உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ
ஏனய்யா கேட்டீர் இக் கேள்வியை

5. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Thursday, 7 October 2021

Arpanithen Ennai Mutrilumai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்


 

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே  எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. பாதாளம் மரணம் அண்டக் கூடா
மாபெரும் அக்கினியாம் உந்தன் நேசம்
வெள்ளமோ ஆட்சியோ தணித்திடா
நேசமே உமக்கே நான் அடிமை

5. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

Wednesday, 6 October 2021

Yesuvin Namamae Kiristhesuvin Namamae இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே


 

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே – வானம்
பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. மாந்தர் போற்றும் நாமம் – விண்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் – இயேசு

2. பாவம் போக்கும் நாமம் – தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம் – இயேசு

3. பேய் நடுங்கும் நாமம் – கடும்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் – இயேசு

4. இனிமை தங்கும் நாமம் – தீய
இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம் – இயேசு

5. சாவை வென்ற நாமம் – பாவ
சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே – இயேசு

Tuesday, 5 October 2021

Konja Kaalam கொஞ்ச காலம்


 

கொஞ்ச காலம் இயேசுவிற்காக

கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்

இயேசுவை நான் காணும் போது

 

அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்

ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்

அந்த நாடு சுதந்தரிப்பேன்

 

1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை

கடந்தென்று நான் மறைவேன்

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே

தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச

 

2. இந்த தேகம் அழியும் கூடாரம்

இதை நம்பி யார் பிழைப்பார்

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே

இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச

 

3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்

வரவேற்பு அளிக்கப்படும்

என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச

 

4. பலியாக காணிக்கையாக

படைத்தேனே உமக்காக

என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே

ஏழை நான் என்றும் உம் அடிமைகொஞ்ச

Monday, 4 October 2021

Kaalai Thorum Karthanae காலை தோறும் கர்த்தனே


 

காலை தோறும் கர்த்தனே புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன்

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

4. கனிமரமாய் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

5. ஜாதிகள் நடுவில் உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்

Saturday, 2 October 2021

Alleluya Alleluya En Aathumaave அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே


 

அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

1. நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனை துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்

2. நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்

3. என் ஆத்துமத் தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

4. கர்த்தர் சதா காலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்

Friday, 1 October 2021

Yesuvaalae Pidikkapattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்


 

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசுஎன் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார்இந்த

3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்ந்து மகிழ்ந்திருப்பேன்நான்

4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்