Wednesday, 22 September 2021

Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்


 


1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா  உனக்காக

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுவாயோ  உனக்காக

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா  உனக்காக

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக  உனக்காக

Ratha Kottaikulle இரத்தக் கோட்டைக்குள்ளே


 

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்


Monday, 20 September 2021

KaiVidar Yesu Kaividar கைவிடார் இயேசு கைவிடார்


 

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார்

1. சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்கைவிடார்

2. சாவின் பள்ளத்தாக்கில்  நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்கைவிடார்

3. மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணமின்றி எள்ளி  நகைத்திட்டாலும்
ஜெய கர்த்தராம் நம் இயேசு
ஜெயம் காண கிருபை செய்வார் கைவிடார்

Sunday, 19 September 2021

Rajathi Rajan Yesu இராஜாதி இராஜன் இயேசு


 

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்

சந்திக்க ஆயத்தமா

வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்

சந்திக்க ஆயத்தமா

 

கேள்  கேள்  மானிடரே

சிந்திக்க ஆயத்தமா

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்

சந்திக்க ஆயத்தமா 

 

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே

சந்திக்க ஆயத்தமா

பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை

சந்திக்க ஆயத்தமா

 

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்

சந்திக்க ஆயத்தமா

கத்திக் கதறியே தாழிடுவார்

சந்திக்க ஆயத்தமா

 

4. உலகமனைத்துமே கண்டிடுமே

சந்திக்க ஆயத்தமா

பரிசுத்தவான்களின் போர் நிற்குமே

சந்திக்க ஆயத்தமா

Saturday, 18 September 2021

Atho Or Jeeva Vaasalae அதோ ஓர் ஜீவ வாசலே


 

1. அதோ ஓர் ஜீவ வாசலே

அவ்வாசலில் ஓர் ஜோதி

எப்போதும் வீசுகின்றதே

மங்காத அருள்ஜோதி

 

ஆழ்ந்த அன்பு இதுவே

அவ்வாசல் திறவுண்டதே

பாரேன் பாரேன்

பார் திறவுண்டதே.

 

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

கண்டடைவார் மெய்வாழ்வும்

கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

எத்தேச ஜாதியாரும்.

 

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

அவ்வாசலில் உட்செல்வோம்

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்

கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Friday, 17 September 2021

Alba Omega Aathium Neerae அல்பா ஒமேகா ஆதியும் நீரே


 

அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)

1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன்

2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்
கனிகள் பெற்றிடுவேன்

3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம் போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன்

4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே
பெருகிப் படர்ந்திடும்

Devan Thangum Ullam தேவன் தங்கும் உள்ளம்


 

தேவன் தங்கும் உள்ளம்
அது தேவாலயம்

1. அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்

2. துதிகள் நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

3. அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்