Saturday, 18 September 2021

Atho Or Jeeva Vaasalae அதோ ஓர் ஜீவ வாசலே


 

1. அதோ ஓர் ஜீவ வாசலே

அவ்வாசலில் ஓர் ஜோதி

எப்போதும் வீசுகின்றதே

மங்காத அருள்ஜோதி

 

ஆழ்ந்த அன்பு இதுவே

அவ்வாசல் திறவுண்டதே

பாரேன் பாரேன்

பார் திறவுண்டதே.

 

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

கண்டடைவார் மெய்வாழ்வும்

கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

எத்தேச ஜாதியாரும்.

 

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

அவ்வாசலில் உட்செல்வோம்

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்

கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Friday, 17 September 2021

Alba Omega Aathium Neerae அல்பா ஒமேகா ஆதியும் நீரே


 

அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)

1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன்

2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்
கனிகள் பெற்றிடுவேன்

3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம் போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன்

4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே
பெருகிப் படர்ந்திடும்

Devan Thangum Ullam தேவன் தங்கும் உள்ளம்


 

தேவன் தங்கும் உள்ளம்
அது தேவாலயம்

1. அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்

2. துதிகள் நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

3. அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம்
அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்

 

Tuesday, 14 September 2021

Megameethinil Vegamudan மேக மீதினில் வேகமுடன்


 

மேக மீதினில் வேகமுடன்
மேசியா ஏசுவே வந்திடுவார்

1. மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூதசேனை சூழ்ந்திடவே

2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறை வேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே

3. தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
கானக சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா

4. காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலே
நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்

5. இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்

6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காகக் காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

Monday, 13 September 2021

Viduthalai Viduthalai விடுதலை விடுதலை


 

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே

இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்

தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

 

1. தடுக்கும் பாவ தளைகளில் விடுதலை

கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை

என்ன சந்தோஷம் இந்த விடுதலை

எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்  - விடுதலை

 

2. எரிக்கும் கோபப் பிடியினில்  விடுதலை

விதைக்கும் தீய பொறாமையில்  விடுதலை

அன்பர் இயேசுவே தந்த  விடுதலை

இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே - விடுதலை

 

3. அடுக்காய் பேசும் பொய்யினில்  விடுதலை

மிடுக்காய் வீசும் பெருமையில்  விடுதலை

ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே

தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே - விடுதலை

 

4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை

மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே

என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு

மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையோ - விடுதலை

Alleluah Thuthi magimai அல்லேலூயா துதி மகிமை


 

அல்லேலூயா துதி மகிமைஎன்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடி வருவாயா

2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்க வேண்டும்

3. ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

5. கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்

Sunday, 12 September 2021

Seeyon Thesamathil சீயோன் தேசமதில்


 

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

அன்பருடன் வாழ்வேன்

ஜெயகீதம் பேரின்பம்

துதி பாடி மகிழுவேன்

 

1. நகரத்தின் வீதிகள்

பொன்னாக மின்னுதே

இராப் பகல் இல்லையே - என்

இரட்சகர் வெளிச்சமே

 

2. என் கண்ணீர் யாவையும்

கரத்தால் துடைப்பாரே

சஞ்சலமில்லையே - என்

நேசர் மகிழ்ச்சியே

 

3. மண் சாயல் மாறியே

விண் சாயல் அணிந்துமே

மறுரூபம் அடைவேனே - என்

இயேசுபோல் மாறுவேன்

 

4. நிதமும் என் நேசரை

துதிபாடி போற்றுவேன்

மகிபனின் தேசத்தில் - நான்

மகிமையாய் வாழுவேன்