Thursday, 12 August 2021

Ekkaalathum Karthar எக்காலத்தும் கர்த்தர்


 

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

உயர்வோ தாழ்வோ எந்நிலையோ

எந்தன் தஞ்சம் இயேசுவே

 

1.மண்ணின் வாழ்வும் மாயையாகும்

மனிதன் காண்பது பொய்யாகும்

மாறிடா நேசர் இயேசுவே

மாறாத அன்பு என்றும் போதுமே

 

2.அலைகள் மோதி எதிர்வந்தாலும்

 கலங்கிடேனே வாழ்க்கையிலே

அசையா எந்தன் நம்பிக்கை

நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

 

3.அவரை நோக்கி ஜெபிக்கும்போது

அருகில் வந்து உதவிசெய்வார்

கைவிடாமல் கருத்துடன்

காத்தென்னை என்றும் நடத்திடுவார்

 

4.தேவ பயமே ஜீவ ஊற்று

மரண கண்ணிக்கு விலக்கிடுமே

தேவ பாதையில் நடந்திட

தேவாவியானவர் உதவி செய்வார்

 

5.முன்னறிந்து அழைத்த தேவன்

முடிவு வரையும் நடத்திடுவார்

தேவ சாயல் மாறியே

தேவாதி தேவனை தரிசிப்பேனே

Adaikalamae Umathadimai அடைக்கலமே உமதடிமை


 

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
  உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
 

Wednesday, 11 August 2021

Siluvaiyil Araiyunda சிலுவையில் அறையுண்ட


 1. சிலுவையில் அறையுண்ட இயேசுவே

உம்மையே நோக்கி பார்க்கிறேன் 

என் பாவ சுமைகளோடு 

உம்  பாத நிழலில் நிற்கிறேன்

                        

இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி 

இன்றே உம்முடன் 

 வான்வீட்டில் என்னையும் சேருமே  


2. தந்தையே இவர்களை மன்னியும் 

அறியாமல் செய்தார்கள்  என்றீர் 

மாறாத இரக்கத்தால் என்னை 

மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே  --- இயேசுவே 


3. அம்மா இதோ உன் மகன் என்றீர்

இதோ உன் தாய் என்றே  நேசத்தால் 

அன்னையின் அன்பினில் நாளுமே 

என்னையும் வாழ்ந்திட செய்யுமே  ---இயேசுவே 

 

4. தாகமாய் உள்ளதே இறைவா 

ஏன் என்னை கை விட்டீர் என்றீரே 

கைவிடா நேசத்தால் எனக்கும் 

தாகம் மாற்றும் ஜீவநீரை  தாருமே  --- இயேசுவே 


5. தந்தையே உமது கையில் என் 

ஆவியை ஒப்படைக்கின்றேன் 

என்னையும்  உமது கரத்தில் 

முற்றிலும் கையளிக்கின்றேன்  --- இயேசுவே

Neer Illatha Naalellam நீர் இல்லாத நாளெல்லாம்


 

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Monday, 9 August 2021

Putham Puthiya Padal புத்தம் புதிய பாடல்


 

புத்தம் புதிய பாடல் தந்தார்

நித்தம் அவரை துதித்திடவே

 

1. காலையில் கூவிடும் பறவைகளும்

மாலையில் கூப்பிடும் விலங்குகளும்

இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன

 

2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்

பாறையில் மோதிடும் கடலலையும்

துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன

 

3.காகங்கள் கரைந்திடும் குரலை கேட்டு

படைத்தவர்  மகிழ்ந்திடும் வேளையிலே

பாவி என் பாடலின் துதி கேட்டு

என் தேவன் களித்திட மகிழ்வேன் நான்

 

4.உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை

உண்மையாய் துதித்திட முடியவில்லை

கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்

இன்பமாய் இயேசுவை துதித்து வாழ்வேன்

 

Neengatha Pavam நீங்காத பாவம்


 

நீங்காத பாவம் நீங்காததேனோ

 நீங்கிடும் நாள்தானிதோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று அழைக்கிறார்

 

1. காணாத ஆட்டை தேடி உன் நேசர்

கண்டுன்னை சேர்த்திடுவார்

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று அழைக்கிறார்

 

2. என்பாவம் போக்கி என்னையும் மீட்டார்

உன்னையும் மீட்டிடுவார்

 பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

 வாவென்று அழைக்கிறார்

 

3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால்

எங்கு நீ சென்றிடுவாய்

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

 வாவென்று அழைக்கிறார்

Sunday, 8 August 2021

Pava Sanjalathai பாவ சஞ்சலத்தை


 

1.பாவ சஞ்சலத்தை நீக்க

பிராண சிநேகிதனுண்டே

பாவ பாரம் தீர்ந்து போக

மீட்பர் பாதம் தஞ்சமே

லோக துக்கம் துன்பத்தாலே

நெஞ்சம் நொந்து சோருங்கால்

துன்பம் இன்பமாக மாறும்

ஊக்கமான ஜெபத்தால்

 

2.கஷ்ட நஷ்டம் உண்டானாலும்

இயேசுவண்டை சேருவோம்

மோச நாசம் நேரிட்டாலும்

ஜெப தூபம் காட்டுவோம்

நீக்குவாரே நெஞ்சின் நோவை

பெலவீனம் தாங்குவார்

நீக்குவாரே மனச் சோர்வை

தீய குணம் மாற்றுவார்

 

3.பெலவீனமான போதும்

கிருபாசனமுண்டே

பந்து ஜனம் சாகும்போதும்

புகலிடம் இதுவே

ஒப்பில்லாத பிராணநேசா

உம்மை நம்பி நேசிப்போம்

அளவற்ற அருள் நாதா

உம்மை நோக்கி கெஞ்சுவோம்