Monday 19 July 2021

En Jeba Velai Vanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்


 En Jeba Velai Vanjippen

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

அப்போதென் துக்கம் மறப்பேன்

பிதாவின் பாதம் பணிவேன்

என் ஆசையாவும் சொல்லுவேன்

என் நோவுவேளை தேற்றினார்

என் ஆத்ம பாரம் நீக்கினார்

ஒத்தாசை பெற்றுத் தேறினேன்

பிசாசை வென்று ஜெயித்தேன்


2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்

மன்றாட்டைக் கேட்போர் வருவார்

பேர் ஆசீர்வாதம் தருவார்

என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்

என் பாதம் தேடு ஊக்கமாய்

என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்

இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்


3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

ஆனந்த களிப்படைவேன்

பிஸ்காவின் மேலே ஏறுவேன்

என் மோட்ச வீட்டை நோக்குவேன்

இத்தேகத்தை விட்டேகுவேன்

விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்

பேரின்ப வீட்டில் வசிப்பேன்

வாடாத க்ரீடம் சூடுவேன்

Sunday 18 July 2021

Dasare Iththaraniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்


 

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

5.இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

Igathin Thukam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்


 Igathin Thukam Thunbam 

1.  இகத்தின் துக்கம் துன்பம்

 கண்ணீரும் மாறிப்போம்

முடிவில்லாத இன்பம் 

 பரத்தில் பெறுவோம்


2. இதென்ன நல்ல ஈடு

 துன்பத்துக்கின்பமா

பரத்தில் நிற்கும் வீடு

 மரிக்கும் பாவிக்கா


3. இப்போது விழிப்போடு 

 போராட்டம் செய்குவோம்

விண்ணில் மகிழ்ச்சியோடு

 பொற் கிரீடம் சூடுவோம் 


4.இகத்தின் அந்தகார

ராக்காலம் நீங்கிப்போம்

சிறந்து ஜெயமாக

 பரத்தில் வாழுவோம்


5. நம் சொந்த ராஜாவான

கர்த்தாவை நோக்குவோம்

கடாட்ச ஜோதியான

அவரில் பூரிப்போம்

Saturday 17 July 2021

Yesuvukkai Thondu Seithidave இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே


 

இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமிந் நானிலத்தில் வருதே

1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரைஏசுவுக்காய்

2. பாவத்தில் மா ஜனம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்- ஏசுவுக்காய்

3. பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவேஏசுவுக்காய்

4. ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவேஏசுவுக்காய்

5. மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தை காத்துக் கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்ஏசுவுக்காய்

 


Friday 16 July 2021

Thothira Pathirane தோத்திர பாத்திரனே


Thothira Pathirane 

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதியுமக்கே

நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்

நித்தியம் துதியுமக்கே


1. சத்துரு பயங்களின்றி  நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே

சுற்றிலுங் கோட்டையானாய் 


2. விடிந்திருள் ஏகும்வரை  கண்ணின்

விழிகளை மூடாமல்,

துடி கொள் தாய்போல் படிமிசை எமது

துணை எனக் காத்தவனே 


3. காரிருள் அகன்றிடவே  நல்ல

கதிரொளி திகழ்ந்திடவே

பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன

பாங்கு சீராக்கி வைத்தாய்


4. இன்றைத் தினமிதிலும்  தொழில்

எந்தெந்த வகைகளிலும்

உன் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்

ஊன்றியே காத்துக் கொள்வாய்

Ratha Satchi Koottam இரத்த சாட்சி கூட்டம்


 

1. இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்

நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்

ஜீவன் சுகம் பெலன் யாவையும்  ஈந்ததால்

சுத்த சுவிசேஷம் ஓங்குதே

 

போர் வீரரே பூமி மாளுதே

பாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே

தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே

தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்

 

2. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட

ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட

கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த

கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே

 

3. நாடு நகரமோ காடு மலையோ

நாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்

மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி

கண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே

 

4. தாகமோ பசியோ நோக்கிடாமலே

லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே

முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே

இன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே

 

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட

ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட

ஆவியிலே அனலாய் நிலை நின்றிட

ஆண்டவர் அருள் பொழிகுவார் -போர் வீரரே

 

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்

சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்

வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்

வல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே

 

7. பிரதி பலன் ஏந்தி ஏசு வருவார்

பாடுபட்ட கர்த்தரோடு நாமும் சேருவோம்

ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்

ஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே

Thursday 15 July 2021

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்  (2)

1. நெஞ்சின் நோவுகள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே  (2)

2. சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ  (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னை  தேற்றுவார் (2)