Friday 2 July 2021

Antho Kalvariyil அந்தோ கல்வாரியில்


 Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்கினார் (2) மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோ டழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே அதிசயம் இது இயேசுவின் நாமம் அதிலும் இன்பம் அன்பரின் சிநேகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்திடவே சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Thursday 1 July 2021

Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்


Deva Devan Balakanai 1.தேவ தேவன் பாலகனாய் தேவ லோகம் துறந்தவராய் மானிடரின் சாபம் நீங்க மா நிலத்தில் அவதரித்தார் அல்லேலூயா அல்லேலூயா அற்புத பாலகன் இயேசுவுக்கே 2. பரம சேனை இரவில் தோன்றி பாரில் பாடி மகிழ்ந்திடவே ஆ நிரையின் குடில் சிறக்க ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா 3. ஆயர் மனது அதிசயிக்க பேயின் உள்ளம் நடுநடுங்க தாயினும் மேல் அன்புள்ளவராய் தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா 4. லோகப்பாவம் சுமப்பதற்காய் தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே வேதம் நிறை வேற்றுதற்கோ ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா 5. தாரகையாய் விளங்கிடவோ பாரில் என்னை நடத்திடவோ ஆருமில்லா என்னைத் தேடி அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா

Kalvari Anbai கல்வாரி அன்பை


 Kalvari Anbai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1. கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே -- கல்வாரி 2. சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே -- கல்வாரி 3. எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvariyin Karunaiyithe கல்வாரியின் கருணையிதே


 Kalvariyin Karunaiyithe 1. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 3. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் 5. மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே

Sunday 27 June 2021

Yesu Nesikkirar இயேசு நேசிக்கிறார்


 

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவில லாச்சரியம் — இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்த மாச்சரியம் — இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவ ரன்பின் கரத்துளே
ஆவலாய்ப்  பறப்பேன்  — இயேசு

5. இராஜன் யேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் யேசெனைத் தானே  சித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு

Friday 25 June 2021

Jeeva Kiristhu uyirthelunthar ஜீவகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்


  Jeeva Kiristhu uyirthelunthar 1. ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் தேவ குமாரன் மரித்தெழுந்தார் பாவங்கள் போக்க பாவியை மீட்க பலியான இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா கல்லறைக் காட்சி அற்புத சாட்சியே ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2) 2. பாதாளம் யாவும் மேற்கொண்டவர் வேதாள கூட்டம் நடுங்கிடவே அன்றதிகாலை மா இருள் வேளை மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் 3. நாம் தொழும் தேவன் உயிருள்ளவர் நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே சாவை ஜெயித்து சாட்சி அளித்து சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் 4 பூரிப்புடன் நாம் பாடிடுவோம் பூலோக மெங்கும் சாற்றிடுவோம் என் மன ஜோதி தம் அருள் ஆவி என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் 5. நல் விசுவாசம் தந்திடுவார் நம்பிடுவோரை எழுப்பிடுவார் எக்காள சத்தம் கேட்டிட நாமும் ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

Thursday 24 June 2021

Vaarungal Iniya Irai Makkale வாருங்கள் இனிய இறை மக்களே


 

வாருங்கள் இனிய இறை மக்களே

இறைவனை வழிபட இறை இல்லத்தில்

இணைந்தே பணிவோம் நிறை மனதாய்

பரிசுத்த அலங்காரத்துடனே நாம்

 

1. கறையில்லா நெஞ்சம் இறை இல்லம்

இணையில்லா பலியும் இதுவன்றோ

பழுதற்ற பலியாய் நம்மையே

படைத்தே பணிவோம் இணைந்தின்றே

 

2. களங்கம் இல்லா ஞானப்பாலே

கறை கறை இன்றி வளர வழி

பருகுவோம் வளருவோம் ஒரேசத்தில்

சுமப்போம் சுமக்கும் அது நம்மை

 

 3. ஒளியென்ற இறைவன் வழி நின்று

ஒளிருவோம் முறையாய் இது நன்று

இருளில்லை இங்கு என்றாக

திருமறை தெய்வமாய் ஒளிர்ந்திடுவோம்

 

4. படைப்போம் படைப்பின் கோனிக்கென்று

படைப்பின் மேன்மையை பாங்குடனே

பலர்காய் கனிகள் தானியத்தை

மகிழ்வுடன் படைப்போம் மங்களமாய்

 

5. சிலுவையை சுமப்போம் திருச்சபையே

இருப்போம் சிலுவையின் நிழல்தனிலே

இனியில்லை தீங்கு என்றாக

இடமில்லா ஆசிக்கு சொந்தமாக