Thursday, 24 June 2021

Vaarungal Iniya Irai Makkale வாருங்கள் இனிய இறை மக்களே


 

வாருங்கள் இனிய இறை மக்களே

இறைவனை வழிபட இறை இல்லத்தில்

இணைந்தே பணிவோம் நிறை மனதாய்

பரிசுத்த அலங்காரத்துடனே நாம்

 

1. கறையில்லா நெஞ்சம் இறை இல்லம்

இணையில்லா பலியும் இதுவன்றோ

பழுதற்ற பலியாய் நம்மையே

படைத்தே பணிவோம் இணைந்தின்றே

 

2. களங்கம் இல்லா ஞானப்பாலே

கறை கறை இன்றி வளர வழி

பருகுவோம் வளருவோம் ஒரேசத்தில்

சுமப்போம் சுமக்கும் அது நம்மை

 

 3. ஒளியென்ற இறைவன் வழி நின்று

ஒளிருவோம் முறையாய் இது நன்று

இருளில்லை இங்கு என்றாக

திருமறை தெய்வமாய் ஒளிர்ந்திடுவோம்

 

4. படைப்போம் படைப்பின் கோனிக்கென்று

படைப்பின் மேன்மையை பாங்குடனே

பலர்காய் கனிகள் தானியத்தை

மகிழ்வுடன் படைப்போம் மங்களமாய்

 

5. சிலுவையை சுமப்போம் திருச்சபையே

இருப்போம் சிலுவையின் நிழல்தனிலே

இனியில்லை தீங்கு என்றாக

இடமில்லா ஆசிக்கு சொந்தமாக

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.