Annai Anbilumஅன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய்த் தந்தவர்
உன்னை விசாரிப்பார்
உன் இயேசுவின் தூய அன்பே
1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா
2. மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய் நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய் தேவன் ஈவாரே
3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே
தினம் அதை நீ தேடாயோ
உன் தேவனை சந்தித்திட
உன் ஆயத்தம் எங்கே
4. ஜீவ புத்தகம் விண்ணிலே
தேவன் திறந்து நோக்குவார்
உன் பேர் அதில் உண்டோ இன்றே
உன்னை நிதானிப்பாய்
5. உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா
Sabaiyaare Koodi padi1. சபையாரே கூடிப் பாடி
கர்த்தரை நாம் போற்றுவோம்
பூரிப்பாய் மகிழ் கொண்டாடி
களிகூரக்கடவோம்
இயேசு கிறிஸ்து
சாவை வென்று எழுந்தார்.
2. சிலுவையில் ஜீவன் விட்டு
பின்பு கல்லறையிலே
தாழ்மையாக வைக்கப்பட்டு
மூன்றாம் நாள் எழுந்தாரே
லோக மீட்பர்
வெற்றி வேந்தர் ஆனாரே.
3. மீட்பரே நீர் மாட்சியாக
ஜீவனோடெழுந்ததால்
நாங்கள் நீதிமான்களாகக்
கர்த்தர் முன்னே நிற்பதால்
என்றென்றைக்கும்
உமக்கே மா ஸ்தோத்திரம்.
4. சாவின் ஜெயம் ஜெயமல்ல
தேகம் மண்ணாய்ப் போயினும்
எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல
கர்த்தர் அதை மீளவும்
ஜீவன் தந்து
மறுரூபமாக்குவார்.
Poorana Valkkaiye1. பூரண வாழ்க்கையே
தெய்வாசனம் விட்டு
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது
2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.
3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.
4. முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.
5. எங்களை நேசித்தே
எங்களுக்காய் மாண்டீர்
ஆ சர்வ பாவப் பலியே
எங்கள் சகாயர் நீர்.
6. எத்துன்ப நாளுமே
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம் தூய மீட்பரே
எங்கள் அடைக்கலம்.