Sunday 18 April 2021

Thagam Theerkum jeevanathi தாகம் தீர்க்கும் ஜீவநதி


 Thagam Theerkum jeevanathi

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் 1. அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே 2. கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் 3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான் ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றேன் புன்னகை பூத்து புனிதனும் மறைய புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே 5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்

Friday 16 April 2021

Annai Anbilum அன்னை அன்பிலும்


 Annai Anbilum

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா

Wednesday 14 April 2021

Magil Karththavin Manthaiye மகிழ் கர்த்தாவின் மந்தையே


 Magil Karththavin Manthaiye

1. மகிழ் கர்த்தாவின் மந்தையே மகா கெம்பீரத்துடனே பரத்துக்குன் அதிபதி எழுந்து போனதால் துதி 2. விண்ணோர்க் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மா வணக்கமாய் பணிந்த இயேசு ஸ்வாமிக்குப் புகழ் செலுத்துகின்றது 3. ஆ இயேசு தெய்வ மைந்தனே கர்த்தா பார்த்தா முதல்வரே அடியார் நெஞ்சு உமக்கு என்றைக்கும் சொந்தமானது 4. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக் கூடிப் பாடுங்கள் அவரின் மேன்மை கூறுங்கள்.

Tuesday 13 April 2021

Sabaiyaare Koodi padi சபையாரே கூடிப் பாடி


 Sabaiyaare Koodi padi

1. சபையாரே கூடிப் பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக்கடவோம் இயேசு கிறிஸ்து சாவை வென்று எழுந்தார். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே லோக மீட்பர் வெற்றி வேந்தர் ஆனாரே. 3. மீட்பரே நீர் மாட்சியாக ஜீவனோடெழுந்ததால் நாங்கள் நீதிமான்களாகக் கர்த்தர் முன்னே நிற்பதால் என்றென்றைக்கும் உமக்கே மா ஸ்தோத்திரம். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும் எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தர் அதை மீளவும் ஜீவன் தந்து மறுரூபமாக்குவார்.

Monday 12 April 2021

Poorana Valkkaiye பூரண வாழ்க்கையே


 Poorana Valkkaiye

1. பூரண வாழ்க்கையே தெய்வாசனம் விட்டு தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார் தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார் நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே எங்களுக்காய் மாண்டீர் ஆ சர்வ பாவப் பலியே எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே மா நியாயத்தீர்ப்பிலும் உம் புண்ணியம் தூய மீட்பரே எங்கள் அடைக்கலம்.

Friday 9 April 2021

Jeevanin Ootramae ஜீவனின் ஊற்றாமே


 Jeevanin Ootramae

1. ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன் தீர்த்திடுவார் உந்தன் தாகமதை பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட பரிவாய் அழைக்கிறார் வல்லவரே இயேசு நல்லவரே மிக அன்பு மிகுந்தவரே இயேசு வல்லவரே அவர் நல்லவரே உனக்காகவே ஜீவிக்கிறார் 2. ஆரு மற்றவனாய் நீ அலைந்தே பாவ உளைதனிலே அமிழ்ந்தே மாழ்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர் மந்தையில் சேர்த்திடுவார் - வல்லவரே 3. வியாதியினால் நொந்து வாடுவதேனோ நேயன் கிறிஸ்து சுமந்ததனை சிலுவை மீதினில் தீர்த்ததாலே - இனி சுகமடைந்திடுவாய் - வல்லவரே 4. பரனின் அன்பதை அகமதிலே சொரிந்து தன் திரு ஆலயமாய் மாற்றியே தம்மைப்போல் தேவசாயலாக்கி மகிமை சேர்த்திடுவார் - வல்லவரே 5. வானமும் பூமியும் மாறிப்போயினும் வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர் காப்பார் வழுவாது உள்ளங்கையில் வைத்தே கலங்கிடாதே நீ வா – வல்லவரே

Wednesday 7 April 2021

Aruvigal Aayiramaai அருவிகள் ஆயிரமாய்


 Aruvigal Aayiramaai

1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர் தாகமாய் இருக்கிறேன் என்றார் 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும் 3. அகோரமான நோவிலும் மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம் என் ஆன்மாவும் ஒன்றே 4. அந்நா வறட்சி தாகமும் என்னால் உற்றீர் பேர் அன்பரே என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே