Sunday, 31 January 2021
Arainthu Paarum Karthare ஆராய்ந்து பாரும் கர்த்தரே
Arainthu Paarum Karthare1. ஆராய்ந்து பாரும் கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் 2. ஆராயும் என்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர் 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் 4. ஆராயும் சிந்தை யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும் 5. ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால் அரோசிப்பேன் என் பாவத்தை உம் பேரருளினால் 6. இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன் உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்
Saturday, 30 January 2021
Naan Paadum Kanangalal நான் பாடும் கானங்களால்
Naan Paadum Kanangalalநான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் என் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியாம் என்னை மீட்டெடுத்தீர் — நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்
Friday, 29 January 2021
Thedungal kandadaiveer தேடுங்கள் கண்டடைவீர்
Thedungal kandadaiveer
தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண தேடிடுவோம் அதிகாலமே 1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் எந்த சேதமும் வந்தணுகாமல் இந்தப் புதுதினம் கண்டடைய தந்தனரே தமது கிருபை - தேடுங்கள் 2. நல்ல சுகம் பெலன் தந்து தம் வல்ல நல் ஆவியும் ஈந்து வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து சொல்லதம் அன்பென்னிலே பொழிந்தார்- தேடுங்கள் 3. ஊண் உடை தந்தாதரித்து இந்த ஊழிய பாதையில் காத்து கூப்பிடும் வேளை செவிகொடுத்து கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள் 4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி ஓசையுள்ள கைத்தாளத்தோடே நேசையா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் - தேடுங்கள் 5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் நல்ஜெப தூபம் எனது இன்பம் நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள் 6. கர்த்தரை நான் எப்பொழுதும் என் கண் முன்னில் நிறுத்தி நோக்க நாள் முழுதும் அவர் பின் நடக்க நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்
Thursday, 28 January 2021
Thooya Devanai Thuthithiduvom தூய தேவனை துதித்திடுவோம்
Thooya Devanai Thuthithiduvomதூய தேவனை துதித்திடுவோம் நேயமாய் நம்மை நடத்தினாரே ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம் போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள் கனிவுடன் நம்மை அரவணைத்தே நம் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் 2. யோர்தானைப் போல் வந்த துன்பங்களை இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம் அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் 3. கழுகுக்கு சமமாய் நம் வயது திரும்பவும் வால வயதாகும் புது நன்மையால் புது பெலத்தால் நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் 4. தாவீதுக்கருளின மாகிருபை தாசராம் நமக்குமே தந்திடுவார் எலிசாவைப் போல் இருமடங்கு வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் 5. நலமுடன் நம்மை இதுவரையும் கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே கண்மணி போல் கடைசிவரை காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்
Wednesday, 27 January 2021
Thuthi Thangiya Paramandalaதுதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி 4. அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன் கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி
Sunday, 24 January 2021
Setham Ara Yavum Vara சேதம் அற யாவும் வர
Setham Ara Yavum Vara1. சேதம் அற யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார் காற்றடித்தும் கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார் அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி நீ அவர்தாமே காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும் அவரால் அறும் அல்லோ 6. சீரில்லாத உன் ஆகாத மனதுன்னை ஆள்வது நல்லதல்ல அதற்கல்ல கர்த்தருக்குக் கீழ்ப்படு. 7. கர்த்தர் தந்த உன்மேல் வந்த பாரத்தைச் சுமந்திரு நீ சலித்தால் நீ பின்னிட்டால் குற்றம் பெரிதாகுது. 8. ஆமேன் நித்தம் தெய்வ சித்தம் செய்யப்பட்ட யாவையும் நீர் குறித்து நீர் கற்பித்து நீர் நடத்தியருளும்.
Saturday, 23 January 2021
Thuthisei Maname துதிசெய் மனமே
Thuthisei Manameதுதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே (2) 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே - துதி 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே - துதி 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை - துதி 4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே - துதி 5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே - துதி