Sunday, 14 June 2020

Theeratha Thagathal தீராத தாகத்தால்




Theeratha Thagathal 1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே ஆ ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே நீர் போஷிக்காவிடில் திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர் மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர். 4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர் உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர். 5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர் மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர். 6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

Friday, 12 June 2020

Ithuve Anukiraga Kalamathayitrae இதுவே அனுக்கிரக காலமதாயிற்றே



Ithuve Anukiraga Kalamathayitrae இதுவே அனுக்கிரக காலமதாயிற்றே இரட்சண்ய நாளாயிற்றே எதுவும் தடையின்றி இயேசுவை ஏற்றே எங்குமே சாட்சி சாற்றே 1. வருகையின் காலமும் நெருங்கி விட்டதே வசனங்கள் நிறைவேறுதே திருக்குள்ளவர்களின் செய்கை அப்போதே மறைவாக போகாதே --- இதுவே 2. காலத்தைக் கருத்தின்றி கடத்தி வைக்காதே கர்மத்தைப் பிடிக்காதே பாவத்தைப் பாசமாய் பற்றியிராதே சாபத்தை சாராதே --- இதுவே 3. யுத்தங்கள் உலகினில் ஓயாமல் நடக்குதே சித்தமும் வெளியாகுதே நாடுகளெல்லாமே நடுங்குகின்றதே நாஸ்திகம் வளர்ந்திடுதே --- இதுவே 4. வானவர் வருகையில் சுத்தர் எழுந்திடுவார் சீயோனே உயர்ந்திடும் மகிமையின் சாயல் அடைந்து மன்னவராய் மாநிலத்தையே ஆண்டிடுவார் --- இதுவே

En Meetper Yesu Christhuve என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே




En Meetper Yesu Christhuve 1.என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே உம் பாதத்தண்டை நிற்கிறேன் திக்கற்ற பிள்ளை கெஞ்சவே தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன் 2. என் கிரியைகள் எம்மாத்திரம் பிரயாசை எல்லாம் விருதா உம்மாலேயே மெய்ப் பாக்கியம் உண்டாகும் நேச ரட்சகா 3. உந்தன் சரீரம் ரத்தமும் மெய்ப் பொருள் என்று அறிவேன் உட்கொண்டன்பாய் அருந்தவும் நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தைக் கொண்டென்னைச் சுத்திகரியும் மா திவ்விய ஜீவ அப்பத்தை என் நெஞ்சில் தந்தருளும் 5. என் நாதா உம் சரீரமே மேலான திவ்விய போஜனம் மாசற்ற உந்தன் ரத்தமே மையான பான பாக்கியம்

Megameethu Thootharoditho மேகமீது தூதரோடிதோ

             


Megameethu Thootharoditho 1. மேகமீது தூதரோடிதோ இதோ மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் 2. மேகத்தோடு போனவரிவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந் தொலிக்குதே அல்லேலூயா அருமைரட்சகா 4. ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம் ஓடிப் பாடி உவந்து போற்றுவோம் 5. மனுவேலன்ராஜன் வருகிறார் அதோ அதோ மலை அதிர்ந்திட புவிகுலுங்கிட கடல் கலங்கிட வானோர் பூவோர் வணங்கி போற்றவே 6. இயேசுராஜன் புறப்பட்டார் ஜெயம் ஜெயம் ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர் சென்றேகினார் சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே

Thursday, 11 June 2020

Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு




Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா என் பிரியமே நீ ரூபவதி எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் 1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே அத்திமரம் காய்காய்க்கும் காலம் வந்தததே (2) திராட்சைச்செடி பூ பூத்து வாசம் பெருகுதே (2) – என் பிரியமே 2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே (2) கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு (2) – என் பிரியமே 3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு (2) பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு (2) – என் பிரியமே

Wednesday, 10 June 2020

Ride On Ride On In Majesty




1. Ride on ride on in majesty hark all the tribes Hosanna cry O Saviour meek pursue thy road with palms and scattered garments strowed 2. Ride on ride on in majesty in lowly pomp ride on to die O Christ, thy triumphs now begin o'er captive death and conquered sin 3. Ride on ride on in majesty the angel armies of the sky look down with sad and wondering eyes to see the approaching sacrifice 4. Ride on ride on in majesty the last and fiercest strife is nigh The Father on His sapphire throne awaits His own anointed Son 5. Ride on ride on in majesty in lowly pomp ride on to die Bow thy meek head to mortal pain then take O God thy power and reign

Thayala Yesu Devareer தயாள இயேசு தேவரீர்



Thayala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக்கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வியப்புற்றே அம்மோஷத்தார் அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் தம் ஆசனத்தில் ராயனார் சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் நோ தாங்கத் தலை சாயுமே பின் மேன்மை பெற்று ஆளுமே