Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா
என் பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்
1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்கும் காலம் வந்தததே (2)
திராட்சைச்செடி பூ பூத்து வாசம் பெருகுதே (2) – என் பிரியமே
2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே (2)
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு (2) – என் பிரியமே
3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு (2)
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு (2) – என் பிரியமே
Thursday, 11 June 2020
Wednesday, 10 June 2020
Ride On Ride On In Majesty
1. Ride on ride on in majesty hark all the tribes Hosanna cry O Saviour meek pursue thy road with palms and scattered garments strowed 2. Ride on ride on in majesty in lowly pomp ride on to die O Christ, thy triumphs now begin o'er captive death and conquered sin 3. Ride on ride on in majesty the angel armies of the sky look down with sad and wondering eyes to see the approaching sacrifice 4. Ride on ride on in majesty the last and fiercest strife is nigh The Father on His sapphire throne awaits His own anointed Son 5. Ride on ride on in majesty in lowly pomp ride on to die Bow thy meek head to mortal pain then take O God thy power and reign
Thayala Yesu Devareer தயாள இயேசு தேவரீர்
Thayala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக்கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வியப்புற்றே அம்மோஷத்தார் அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் தம் ஆசனத்தில் ராயனார் சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் நோ தாங்கத் தலை சாயுமே பின் மேன்மை பெற்று ஆளுமே
Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய்
Sathai Nishkalamai 1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச் சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவேன் என் பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைமா றுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மா ரட்சணைசெய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத் தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண் மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே ஆண்டா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4. திரைசேர் வெம்பவமாம் கடல் மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப் பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 5. தாயே தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 6. துப்பார் சின்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் தப்ப தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள, இப்பா ருய்யவென்றே மனுக்கோலமே டுத்த எங்கள் அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 7. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள் நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென ஐயா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
Tuesday, 9 June 2020
Sweet The Moments
1. Sweet the moments rich in blessing which before the cross I spend. Life and health and peace possessing from the sinner's dying Friend. 2. Here I rest in wonder viewing all my sins on Jesus laid and a full redemption flowing from the sacrifice He made. 3. Here I find my hope of heaven While upon the lamb I gaze Loving much and much forgiven, Let my heart o’erflow in praise. 4. Love and grief my heart dividing with my tears his feet I'll bathe Constant still in faith abiding Life deriving from his death. 5. Lord, in ceaseless contemplation fix my thankful heart on Thee till I taste Thy full salvation and thine unveiled glory see
Pirathaana Thoothan Ekkaalam பிரதான தூதன் எக்காளம்
Pirathaana Thoothan Ekkaalam பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) சாயங்காலத்திலோ நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் --- சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம்போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார் --- சாயங் 3. லௌகீகக் கவலைகளினாலும் இலட்சை மிகுந்த வெறியினாலும் எம் இதயம் பாரமடையாமல் எச்சரிக்கையுடன் காத்திருப்போம் --- சாயங் 4. இரவும் பகலும் விழிப்பாய் இருதயம் நொறுங்கி ஜெபிப்போம் கற்புள்ள கன்னிகையாக நாமும் கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் --- சாயங் 5. தவிக்கும் உலகம் அந்த நாளில் தலைகளை உயர்த்தி நடப்போம் வருகை நெருங்க கர்த்தர் இயேசு வாசற்படியில் வந்து நிற்கிறார் --- சாயங்
Monday, 8 June 2020
Karthave En Belane கர்த்தாவே என் பெலனே
Karthave En Belane கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் நீர் கேடகம் நீர் இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர் 1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும் துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப (2) உருக்கமாய் வந்து உதவி செய்தார் (2) 2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர் உத்தமனை நீர் உயர்த்திடுவீர் புனிதனுக்கு நீர் புனிதரன்றோ (2) புதிய கிருபையின் உறைவிடமே (2) 3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலைத் தாண்டுவேன் சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் (2) சதா காலமும் நான் ஜெயம் எடுப்பேன் (2) 4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர் உமது கரம் என்னை உயர்த்தும் கர்த்தரை அல்லால் தேவன் இல்லை (2) அவரே எந்தன் கன்மலையே (2) 5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி மான்களின் கால்களை போலாக்கி நீதியின் சால்வையை எனக்குத் தந்து (2) உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் (2)
Subscribe to:
Posts (Atom)