Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்
Sunday, 24 May 2020
Munnorin Deivamam முன்னோரின் தெய்வமாம்
Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்
Saturday, 23 May 2020
Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே 1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்ல பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணமுன் கூர் எங்கே பாதாளமுன் ஜெயமெங்கே சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் 5. ஆவியால் இன்றும் என்றும் ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே
Friday, 22 May 2020
Boologathaare Yavarum பூலோகத்தாரே யாவரும்
Boologathaare Yavarum
1. பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்தி, பாட வாருங்கள்.
2. பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3. கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதிசெய்யுங்கள்.
4. கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.
Thursday, 21 May 2020
Devanbai Kaankirom Aananthamae தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே
Devanbai Kaankirom Aananthamae
1. தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே அவர்தாம் கொடுத்த வேதத்திலே வேதத்தின் மாட்சிமை யாவிலுமே இயேசுவின் அன்புதான் பேரின்பமே ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே அன்பு வைத்தார் ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே வைத்தார் 2. அவ்வன்பை மறந்து திரிந்தாலும் எங்குமே அதென்னை தொடர்ந்திடும் மீட்பரின் பாசத்தை நினைக்கவே ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே 3. மகாராஜன் மகிமை காட்சி காண்பேன் நித்தியம் அவர் மேல் பாடிடுவேன் ஒப்பில்லா ஓரின்ப கீதத்தையே ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே 4. மீட்பரை அன்பு தான் கொண்டு வந்தே மாளவும் செய்ததே குருசிலே என்னையும் நேசித்தார் நிச்சசயமே இவ்வன்பர் நேசிப்பேன் எந்நாளுமே 5. தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால் பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால் சாத்தானும் ஓடினான் என்னை விட்டே இயேசுவின் அன்பை நான் கூறவுமேWednesday, 20 May 2020
Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்
Tuesday, 19 May 2020
Alangara Vaasalale அலங்கார வாசலாலே
Sunday, 17 May 2020
Evvannamaaga Karthae எவ்வண்ணமாக கர்த்தரே
Subscribe to:
Posts (Atom)