Alleluya Namathandavarai
அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து
1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை
தேன் குழலோடும் துதித்திடுவோம்
2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டு துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி
துதித்து உயர்த்திடுவோம்
Irangumae En Yesuvae
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐசுவரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
1. உற்றார் பெற்றோரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபங் கேளுமே
2. ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக
ஐங்காயங்கள் ஏற்றீரே
தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத்
தேடும் ஜெபங்கேளுமே
3. தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங் கேளுமே
Naan Thoothanaga Vendum
1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்
என் மீட்பரின் சமூகம்
நான் கண்டு களிப்பேன்.
2. அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.
3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.
4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அனந்த பாக்கியமே.