Thevan Thantha Valvallavaa
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை சோதனை என்று பேசலாமா
சொல்லலாமா நீங்க சொல்லலாமா
பேசலாமா நீங்க பேசலாமா --- தேவன்
1. தேவன் தந்த மனைவியல்லவா
அவளை அடிமையாக நடத்தலாமா
உன்னை நம்பி வந்த மான் அல்லவா
அவளை கசந்து கசந்து திட்டலாமா
நடத்தலாமா அப்படி ( நீங்க) நடத்தலாமா
திட்டலாமா கசந்து திட்டலாமா --- தேவன்
2. தேவன் தந்த கணவரல்லவா
அவரை எதிரியாக நினைக்கலாமா
பாசம் நிறைந்த புருஷனல்லவா
அவரை எதிர்த்து எதிர்த்து பேசலாமா
நினைக்கலாமா அப்படி நினைக்கலாமா
பேசலாமா எதிர்த்து பேசலாமா--- தேவன்
3. தேவன் தந்த பிள்ளையல்லவா
அவனை நாயைப் போல விரட்டலாமா
வாரிசாக வந்த செல்வமல்லவா
அவனை பாசமின்றி பார்க்கலாமா
விரட்டலாமா பிள்ளையை விரட்டலாமா
பார்க்கலாமா இப்படி பார்க்கலாமா --- தேவன்
4. தேவன் தந்த தாய் அல்லவா
அவரை தனியே ஒதுக்கி தள்ளலாமா
கனத்துக்குரிய தந்தையல்லவா
அவரை அற்பமாக எண்ணலாமா
தள்ளலாமா ஒதுக்கி தள்ளலாமா
எண்ணலாமா அற்பமாய் எண்ணலாமா --- தேவன்
5. தேவன் தந்த அத்தையல்லவா
அவளை இடைஞ்சல் என்று வெறுக்கலாமா
ஆதரவான மருமகள் அல்லவா
அவளை குற்றப்படுத்தி தூற்றலாமா
வெறுக்கலாமா அத்தையை (மாமியாரை) வெறுக்கலாமா
தூற்றலாமா அவளை (மகளை) தூற்றலாமா --- தேவன்
Palare Or Nesar Undu
1. பாலரே, ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்
2. பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச வீட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ
3. பாலரே, ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நல் மீட்பரின் பேரன்பால்
பொற்கிரீடம் அணிவீர்
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்
4. பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை
நீர் அவரிடம் வாரும்
ஈவார் அவ்வின்பத்தை
Yaarilum Melaana Anbar
1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே
மற்ற நேசர் விட்டுப்போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்
மா நேசரே
2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே
பற்றிக் கொண்ட என்னை விடார்
மா நேசரே
இன்றும் என்றும் பாதுகாப்பார்
பற்றினோரை மீட்டுக் கொள்வார்
துன்ப நாளில் தேற்றல் செய்வார்
மா நேசரே
3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை
எந்தத் துன்பம் வந்தும், நில்லு
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு
மா நேசரே
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்
மா நேசரே
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம்
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்
மா நேசரே
Entrum Karthavudan
1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்
2. அதோ சமீபமே
பிதாவின் வீடு தான்
என் ஞானக் கண்கள் காணுமே
மின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே
3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே, இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்
4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்