Sunday, 29 March 2020

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே - எல்லா

Friday, 27 March 2020

Yesuve Kalvariyil இயேசுவே கல்வாரியில்

Yesuve Kalvariyil 1. இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே 2. பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே 3. இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே பின்பு மோட்சலோகத்தில் என்றும் வாழுவேனே

Wednesday, 25 March 2020

En Nenjam Nonthu என் நெஞ்சம் நொந்து

En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே குத்துண்ட மீட்பர் கரத்தால் அக்காயம் ஆறுமே 2. தீராத துக்கம் மிஞ்சியே நான் கண்ணீர் விடினும் நோவுற்ற இயேசு நெஞ்சமே மெய் ஆறுதல் தரும் 3. என் மனஸ்தாபத் தபசால் நீங்காத கறையும் வடிந்த இயேசு ரத்தத்தால் நிவிர்த்தியாகிடும் 4. என் மீட்பர் கரத்தால் சுகம் செந்நீரால் தூய்மையாம் என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் அன்பாய் உணருமாம் 5. அக்கரம் நீட்டும், இயேசுவே அவ்வூற்றைத் திறவும் குத்துண்ட உந்தன் பக்கமே என்றன் அடைக்கலம்

Ummai Thuthikkirom உம்மைத் துதிக்கிறோம்

Ummai Thuthikkirom 1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2. கிறிஸ்துவே இறங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3. நித்ய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

Tuesday, 24 March 2020

Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார் ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே (2) 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார் சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய் கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு 2. அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை அருமை ரட்சகர் தொங்கினார் தனியே அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) – ஏழை மனு 3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே (2) – ஏழை மனு 4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய சிலுவையில் ஜெயித்தார் யாவையும் (2) – ஏழை மனு 5. மாயை உலகம் அதையும் நம்பாதே மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே நித்திய தேவனை நேசித்தால் இப்போதே நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ நம்பிக்கையோடே வந்திடுவாய் (2) – ஏழை மனு

Sunday, 22 March 2020

Aathmame Un Aandavarin ஆத்மமே உன் ஆண்டவரின்

Aathmame Un Aandavarin 1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து அல்லேலுயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி அல்லேலுயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 3. தந்தை போல் மா தயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே அல்லேலுயா இன்னும் அவர் அருள் விரிவானதே 4. என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே நாற்றிசையும் நின்றெழுந்து பணிவர் நீர் பக்தரே அல்லேலுயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர் 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர் 6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்