Monday, 16 March 2020

Kurusin Mel Kurusin Mel குருசின் மேல் குருசின் மேல்

Kurusin Mel Kurusin Mel 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர் பிராணநாதன் பிராணாநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்

2. பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய் தேவ குமாரன் மா சாபத்திலாயினார்

3. இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

4. பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசினின் காட்சியைத் தரிசித்துத் தேறுவேன்

6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால் நித்தமும் குருசினின் நேசத்தை சிந்திப்பேன்
7. பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில் ஆவலாய் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்

8. சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் சிலுவையின் நேசத்தைச் சிந்தித்து நோக்குவேன்

9. சத்ருக்கள் கூட்டமாய் சண்டைக்கு சூழ்கையில் சிலுவையில் காண்கின்ற நேசத்தை சிந்தித்தேன்

10. இம்மகா நேசத்தை ஆத்மமே சிந்திப்பாய் இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Sunday, 15 March 2020

Mutrilum Alaganavar முற்றிலும் அழகானவர்

Mutrilum Alaganavar 1. முற்றிலும் அழகானவர் எல்லாரிலும் மா சிறந்தோர் தேவாதி தேவனானவர் நேசக் கல்வாரி நாயகா கல்வாரி நாயகா என் உள்ளம் ஆட்கொண்டீர் என்னை மீட்க மரித்தீர் கல்வாரி நாயகா 2. காயப்பட்டு நொறுங்குண்டு பாவ துக்கம் சுமந்தோராய் நீசச் சிலுவையில் மாண்டார் துக்கக் கல்வாரி நாயகா 3. ஜீவன் சமாதானம் ஈய சிறையுற்றோரின் மீட்புக்காய் இரத்தமாம் ஊற்றைத் திறந்தார் இரக்கக் கல்வாரி நாயகா 4. நமக்காய் பெற்ற வரங்கள் சுத்தாங்கம் யாவும் நல்கிட அன்பதாம் வெள்ளம் ஊற்றினார் தயாளக் கல்வாரி நாயகா 5. உம்மை மகிமை மாயமாய் கண்டு களிப்பேன் என்பதே இவ்வுலகில் என் ஆறுதல் ஒப்பற்ற கல்வாரி நாயகா 6. கண்ணாடிக் கடல் ஓரமாய் சேர்ந்து நின் அன்பில் மூழ்கியே உம்மைப் போல் என்றும் இருப்பேன் மகிமைக் கல்வாரி நாயகா

Saturday, 14 March 2020

Unnaiyum Ennaiyum Ratchikkave உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே இயேசு தம் ஜீவனை ஈந்தனரே குருசில் கண்டேன் (3) என் இயேசுவை 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே குருசில் கண்டேன் (3) என் இயேசுவை 3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட நானே வழி சத்தியம் ஜீவன் என்றார் சோர்ந்திடாதே நம்பியே வா நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார் 4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார் அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய் அழைக்கிறார் (3) அன்புடனே 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய் அல்லேலூயா (3) ஆமென்

Friday, 13 March 2020

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்ததையோ – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ – குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை – குருசினில் 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில் 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே – அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது பார் – குருசினில் 5. எருசலேம் மாதே மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ – குருசினில்

Thursday, 12 March 2020

Aanigal Paintha Karangalai ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே (2) ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே (2) சரணங்கள் 1. பார் திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதரண்டை சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள் 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே — ஆணிகள்

Tuesday, 10 March 2020

Valvin Oliyanar வாழ்வின் ஒளியானார்


Valvin Oliyanar
வாழ்வின் ஒளியானார் இயேசு வாழ்வின் ஒளியானார் என்னை மீட்க இயேசு ராஜன் வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின் 1. அக்கிரமங்கள் பாவங்களால் நிரம்ப பெற்ற பாவியென்னை அன்பு கரங்கள் நீட்டியே தம் மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 2. வழி தப்பி தடுமாறும் போது வழிகாட்டியாய் செயல்படுவார் வழியில் இருளாய் மாறும் போது வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 3. துன்பங்கள் தொல்லை வரினும் இன்னல்கள் பல வந்திடினும் இன்னல் தீர்க்க வல்ல இயேசு இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்

Sunday, 8 March 2020

Yesuvuke Opuvithen யேசுவுக்கே ஒப்புவித்தேன்

Yesuvuke Opuvithen 1. யேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன் 2. யேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன் 3. யேசுவுக்கே ஒப்புவித்தேன் ஏற்றுகொண்டருளுமேன் நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியாம் 4. யேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்