Friday, 13 March 2020

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்ததையோ – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ – குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை – குருசினில் 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில் 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே – அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது பார் – குருசினில் 5. எருசலேம் மாதே மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ – குருசினில்

Thursday, 12 March 2020

Aanigal Paintha Karangalai ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே (2) ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே (2) சரணங்கள் 1. பார் திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதரண்டை சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள் 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே — ஆணிகள்

Tuesday, 10 March 2020

Valvin Oliyanar வாழ்வின் ஒளியானார்


Valvin Oliyanar
வாழ்வின் ஒளியானார் இயேசு வாழ்வின் ஒளியானார் என்னை மீட்க இயேசு ராஜன் வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின் 1. அக்கிரமங்கள் பாவங்களால் நிரம்ப பெற்ற பாவியென்னை அன்பு கரங்கள் நீட்டியே தம் மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 2. வழி தப்பி தடுமாறும் போது வழிகாட்டியாய் செயல்படுவார் வழியில் இருளாய் மாறும் போது வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 3. துன்பங்கள் தொல்லை வரினும் இன்னல்கள் பல வந்திடினும் இன்னல் தீர்க்க வல்ல இயேசு இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்

Sunday, 8 March 2020

Yesuvuke Opuvithen யேசுவுக்கே ஒப்புவித்தேன்

Yesuvuke Opuvithen 1. யேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன் 2. யேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன் 3. யேசுவுக்கே ஒப்புவித்தேன் ஏற்றுகொண்டருளுமேன் நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியாம் 4. யேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்

Thursday, 27 February 2020

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி அல்லேலூயா 1. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடா கோடியாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடா கோடியாகட்டும் 2. நாட்டிலுள்ள மக்களே பூமியின் குடிகளே என்னுடன் தேவனைத் துதியுங்கள் கூட்டிலுள்ள பறவைப் போல் சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் 3. பெத்தலேகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய் நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4. நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம் இயேசுவை என்றுமே சேவிப்போம் எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார் வருகை வரை நடத்திச் செல்லுவார்

Wednesday, 26 February 2020

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் --- பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் --- தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர் கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம் கசிந்துருக கோடி துயர் சுமப்பான் --- தாழ்மை 3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர் கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில் துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு --- தாழ்மை 4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர் புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம் பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன் பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் --- தாழ்மை

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன் ஏரோதின் நெஞ்சத்திலே வன்மம் எழுகின்றதே