Mavinbam Kondu Nam Devanai
மாவின்பம் கொண்டு நம் தேவனை
தேடி ஓடி வா
கூவி உன்னை அழைக்கிறோம்
புதிய ஆண்டினில்
1. பலவித இக்கட்டுகள் சூழ்ந்து வந்த போதும்
பரம பாதை இடறிடாமல் கடந்து வந்தோமே
2. வஞ்சகரின் கொடுமை சொல் வாதித்த வேளையிலும்
நெஞ்சம் நீட்டி அன்பு கொண்டு நேர்மை வழி கண்டோம்
3. தன்னிருகை நீட்டி நம்மை அணைத்துக் காத்திட்டார்
மன்னாவையும் மா தயவாய் தினமும் ஈந்திட்டார்
4. சென்றாண்டெமின் சேதம் போக்கி சிறப்புக் காணச் செய்த
இன்னோராண்டும் இன்பங் கொள்ள எம்மை நடத்தினீர்
இந்தப் பாரில் ஆவின் வீட்டில்
இயேசு பாலன் பிறந்தாரே
ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம்
ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா
1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே
விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப்
2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட
ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப்
3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர்
வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப்
4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும்
மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்
Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை தான்
அது வாடகை வீடு தான்
1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார் --- இந்த
2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போரிட
ஜெய வீரனாய் திகழ வா --- இந்த
3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் வார்த்தையோ
நித்திய ஜீவனை அருளுமே --- இந்த
4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார் --- இந்த
Narkarunai Naathane
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)
1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)
2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2)
3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலே
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)
Yesuvai Thuthiungal Entrum
இயேசுவை துதியுங்கள் என்றும்
இயேசுவை துதியுங்கள் (2)
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள் (2) --- இயேசு
1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரை துதியுங்கள் (2)
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவை துதியுங்கள் (2) --- இயேசு
2. ஆவியின் அருளால் பாவி நமை சேர்த்த
தலைவனை துதியுங்கள் (2)
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனை துதியுங்கள் (2) --- இயேசு
3. பாவியை ரட்சிக்க பூமியில் தோன்றிய
பரமனைத் துதியுங்கள் (2)
ஆசை கோபம் களவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள் (2) --- இயேசு