Nam Devanai Thuthithu Paadi
நம் தேவனைத் துதித்துப் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
2. மெய் ஜீவ பாதைதனில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடுதனில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
En Nenjame Nee Motchathai
1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி, என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.
2. நட்சத்திரங்கள், சந்திரன்
வெம் காந்தி வீசும் சூரியன்
ஆகாச சேனைகள்,
மின், மேகம், காற்று மாரியே
வானங்களின் வானங்களே
ஒன்றாகப் பாடுங்கள்.
3. விஸ்தாரமான பூமியே
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்.
4. பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்
Yesu Enaku Jeevan
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே (2)
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)
சமாதானம் தந்தார் இயேசு (4) --- துதி
புது வாழ்வு தந்தார் இயேசு (4) --- துதி
விடுதலை தந்தார் இயேசு (4) --- துதி
வல்லமை தந்தார் இயேசு (4) --- துதி
அபிஷேகம் தந்தார் இயேசு (4) --- துதி
En Yesu Rajavukae
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் --- என் இயேசு
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் --- என் இயேசு
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் --- என் இயேசு
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே --- என் இயேசு