Eppadi Paduven Naan
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில் (2)
அடைக்காத ஆண்டவரல்லோ (2)
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே (2)
எப்போதும் பாடிடுவேன் (2)
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே (2)
அதிகமாய் ஆசிர்வதித்தீர் (2)
Um Patham panithen
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கிக் களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்
Melogathai Nadukirom
1. மேலோகத்தை நாடுகிறோம்
அதின் ஜோதிப் பிரகாசத்தையும்
பேரின்பமாம் இன்பக் கடல்
பார்த்தால் என்னமாயிருக்கும்
பார்த்தால் பார்த்தால்
பார்த்தால் என்னமாயிருக்கும்
பேரின்பமாம் இன்பக் கடல்
பார்த்தால் என்னமாயிருக்கும்
2. நம் மீட்பரின் வாசஸ்தலம்
அவர் ரத்தத்தால் மீட்கப்பட்டோர்
மேலோகத்தை நாடிடுவார்
பார்த்தால் என்னமாயிருக்கும்
3. திரியேக தேவனை தாம்
நாம் நேரில் கண்டானந்திப்போம்
பாவம் சாபம் நீங்கலாகி
பார்த்தால் என்னமாயிருக்கும்
Yesu Entra Thiru Namathirku
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
Aandavar Padaitha Vetriyin Naalithu
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி
4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி
Arputhar Arputhar Arputhar
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்
2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்