Van Velli Pragasikkuthe
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே (2)
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்
3. இந்த மாடடை தொழுவத்திலே
அவர் மானிடனாய் பிறந்தார்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்
En Yesu Rajan Varuvar
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்
1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி
2.உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா
3.வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்
Samathanam Oothum
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம்
2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம்
5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்