Wednesday, 27 November 2019

Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்

Kanaga Pathai Kadum Malaiyum
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய்  --- பயப்படாதே

4.குளிர்ந்த  ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய்  --- பயப்படாதே

5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்  --- பயப்படாதே

7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய்  ---- பயப்படாதே

Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

Aanantha Geethangal Ennalum Paadi
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த

Yesu Palanai Piranthar இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Palanai Piranthar
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்

1.உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட --- இயேசு

2.விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

3.ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு

4.கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் --- இயேசு

5.அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் --- இயேசு

Tuesday, 26 November 2019

Yesuvin Pinnae Poga Thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

Yesuvin Pinnae Poga Thuninthen
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

3. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

4. என் மீட்பர் பாதைஎன்றும் பின்செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

6. நேசரின் சித்தம் செய்வதென் பாக்கியம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)

Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்

Deva Devan Balakanai
1.தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மா நிலத்தில் அவதரித்தார்
         
              அல்லேலூயா அல்லேலூயா
             அற்புத பாலகன் இயேசுவுக்கே

2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் ஆடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா

3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா

4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
தாகம் தீர்க்கும்  ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா

5. தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா

Monday, 25 November 2019

Yorthan Nathiyoram Thigaiyaathe யோர்தான் நதியோரம் திகையாதே

Yorthan Nathiyoram Thigaiyaathe
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே    - யோர்

2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே            - யோர்

3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே            - யோர்

4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே        - யோர்

5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே            - யோர்

6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம்  தரித்திடலாமே            - யோர்

Sathiyamum Jeevanumai Nithamume சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Sathiyamum Jeevanumai Nithamume
1.சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

2.என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே        - வானந்

3.சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே        - வானந்

4.அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும்            - வானந்