Wednesday, 6 November 2019

Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே

Aayiram Sthothirame
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4. பலவித சோதனையை
சந்தோஷமாய் சகிப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Koda Kodi Sthothiram Padi கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram Padi 
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து
தேற்றி அணைத்துக்  காத்துக் கொண்டாரே  --- தேவசுதன்

1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்
   பரலோகந் துறந்து பாரினில் பிறந்தார்
   பரமனிவ்வேழையைத்  தேடி வந்தாரே
  பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ  --- பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
   தாசனின் கோலம் தாமெடுத்தணிந்து
   தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
   தம்மை பலியாய்த்  தத்தம் செய்தாரே --- எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
    கேடு வராது காக்கும் நல்மேய்ப்பர் 
    இன்று மென்மேலே வைத்த  நேசத்தால்
   இன்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் --- இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
    சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
   தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
   தங்கியிருப்பேன் சீயோன்மலையில்  --- நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப் போல
    குருவே நீர் என்னை உருவாக்குமையா
   மாசற்ற மணவாட்டியாய் என்னை
   காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா  --- ஏழையென்னை

Sunday, 3 November 2019

Thuthi Geethame Padiye துதி கீதமே பாடியே

Thuthi Geethame Padiye
துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்

2.காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

4.கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்

5.வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

Anpodu Emmai Poshikium அன்போடு எம்மைப் போஷிக்கும்

Anpodu Emmai Poshikium
1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

Saturday, 2 November 2019

Thuthi Geethangalaal Pugalvaen துதி கீதங்களால் புகழ்வேன்

Thuthi Geethangalaal Pugalvaen
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்

1. தினந்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்   --- துதி

2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்   --- துதி

3. துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தமாய்    --- துதி

4. வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்    --- துதி

Friday, 1 November 2019

Singasanathil Veetrirukkum சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

Kalvariye Kalvariye கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே

1. பாவி துரோகி சண்டாளன்
    நானாயினும்
   பாதகம் போக்கிப்
   பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன்
    இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச்
    சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக
   ஆதரவற்றோராய்ப்
   பாதகர் மத்தியில் பாதகன்
    போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூராணி
    மீதினில்
    கள்ளனை போல என்
    நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும்
    சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய்
    நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும்
    என்னிலே இல்லையே
   பின்னை ஏன் நேசித்தீர்
   என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை யான்
    எங்குமே காணேனே
   எவ்விதம் இதற்கீடு
   ஏழையான் செய்குவேன் – கல்வாரியே